»   »  நான் ரெடி தான், ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?: அனுஷ்கா

நான் ரெடி தான், ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?: அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுஷ்கா திருமணத்திற்கு தயாராக உள்ளாராம். ஆனால் மாப்பிள்ளை இதுவரை முடிவு செய்யப்படவில்லையாம்.

யோகா டீச்சரான அனுஷ்கா சூப்பர் தெலுங்கு படம் மூலம் நடிகையானார். 10 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். 35 வயதாகும் அவருக்கும், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து அனுஷ்கா கூறுகையில்,

திருமணம்

திருமணம்

எனக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் கேட்கிறார்கள். இந்நிலையில் எனக்கும், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் என வதந்தி பரவியுள்ளது.

தயார்

தயார்

நான் திருமணத்திற்கு தயார். ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா? நான் தற்போது படங்களில் படுபிசியாக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாக பார்த்து நடிக்கிறேன்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி, ருத்ரமா தேவி படங்கள் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தன. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினேன். இந்த ஆண்டு என் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகவில்லை.

பாகுபலி 2

பாகுபலி 2

அடுத்த ஆண்டு பாகுபலி 2 படம் வெளியாக உள்ளது. என் கதாபாத்திரமான தேவசேனா ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஓம்நமோ வெங்கடேசாய படத்தில் நான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

English summary
Actress Anushka said that though she is ready to get settled, she is waiting for the right time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil