»   »  நானும் ரெண்டு குழந்தைக்கு தாயா நடிப்பேன்.. ஆனா..! - காஜல் அகர்வால்

நானும் ரெண்டு குழந்தைக்கு தாயா நடிப்பேன்.. ஆனா..! - காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காக்கா முட்டை மாதிரி கதை அமைந்தால் தானும் இரண்டு குழந்தைக்குத் தாயாக நடிக்க தயங்கமாட்டேன் என்கிறார் காஜல் அகர்வால்.

முன்னணி நடிகையான காஜல் அகர்வால், தனுஷ் ஜோடியாக மாரி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக செய்தியாளர்களை நேற்று சென்னையில் சந்தித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு காஜல் சொன்ன பதில்களும்...

2 குழந்தைக்கு...

2 குழந்தைக்கு...

கேள்வி: உங்களைவிட இளம் ஹீரோயின் ஐஸ்வர்யா 2 குழந்தைக்கு தாயா நடிச்சாங்க. அந்த மாதிரி நீங்க நடிப்பீங்களா...

பதில்: அப்படி ஒரு கனமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தால், நிச்சயமாக நானும் 2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க தயாராக இருக்கிறேன்.

2 கோடி வேணுமா?

2 கோடி வேணுமா?

கேள்வி: எக்குத்தப்பா சம்பளம் கேக்கறீங்களாமே.. அதுவும் ரூ 2 கோடி வேண்டும் என கட்டாயப்படுத்துகிறீர்களாமே!

பதில்: என் திறமைக்கேத்த சம்பளத்தை கேட்டு வாங்கறேன். இதில் தவறென்ன? (உடனிருந்த தயாரிப்பாளர் ராதிகா, தான் அந்த அளவு சம்பளம் தரவில்லை என்றார்!)

ஹீரோக்களுக்கு விருந்து

ஹீரோக்களுக்கு விருந்து

கேள்வி: ஹீரோக்களுக்கு விருந்து கொடுத்து பட வாய்ப்புகளைப் பிடிப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்: அதெல்லாம் வதந்தி. பட வாய்ப்புக்காக அப்படி யாராவது விருந்து கொடுப்பார்களா என்ன?

தமிழே தெரியாம தமிழ்ல நடிக்கிறீங்களே?

தமிழே தெரியாம தமிழ்ல நடிக்கிறீங்களே?

கேள்வி: தமிழ் படங்களில் நடிக்கிறீர்கள்...ஆனால், உங்களுக்கு தமிழ் பேச தெரியவில்லையே?

பதில்: இப்போதுதான் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச முடியும்.

பிடிச்ச ஹீரோ

பிடிச்ச ஹீரோ

கேள்வி: உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார்?

பதில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

காதலா?

காதலா?

கேள்வி: ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறதே?

பதில்: எனக்கு காதலிப்பதற்கு நேரமில்லை. அப்படி யாரையாவது காதலித்தால், துணிச்சலாக வெளியில் சொல்வேன். இப்போ சினிமாவில் நான் ரொம்ப பிஸி.

வருங்கால கணவர்..

வருங்கால கணவர்..

கேள்வி: வருங்கால கணவர் பத்தி ஏதாவது ஐடியா இருக்குமே?

பதில்: அப்படியெல்லாம் எதுவுமே இல்லை எனக்கு. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓகே. ஆனா, நேர்மையா, என்னைப் புரிந்து கொண்டு துணையா இருப்பவராக இருந்தால் போதும்!

English summary
Actress Kajal Agarwal says that she would act as mother for 2 children whether she got stories like Kakka Muttai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil