»   »  டயர்ட் ஆயிட்டேன், இனிமேல் முடியாது.. ஸ்வேதா மேனன்

டயர்ட் ஆயிட்டேன், இனிமேல் முடியாது.. ஸ்வேதா மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து நான் களைத்துப் போய் விட்டேன். இனிமேலும் அதுபோல நடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.

மலையாள நடிகையான ஸ்வேதா மேனன் கவர்ச்சிகரமான, துணிகரமான ரோல்களில் நடித்துப் பிரபலமானவர். கவர்ச்சி, காமெடி, வில்லத்தனம் என கலந்து கட்டி நடித்து வருபவர்.

இந்த நிலையில் தான் இனியும் கவர்ச்சிகரமாக நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் ஸ்வேதா மேனன். அப்படி நடிப்பது குறித்து யோசிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சவாலான கேரக்டர்கள் தேவை

சவாலான கேரக்டர்கள் தேவை

இனியும் கவர்ச்சிகரமாக நடிப்பதில் அர்த்தம் கிடையாது. இனிமேல் சவாலான முறையிலான கேரக்டர்களில் நடிக்கப் போகிறேன். அதுகுறித்து யோசித்து வருகிறேன்.

காமெடியாக நடிப்பது சவால்

காமெடியாக நடிப்பது சவால்

காமெடி கலந்த ரோலில் நடிப்பது என்பது எந்த நடிகருக்கும், நடிகைக்கும் பெரிய சவாலான விஷயமாகும். அதுபோன்ற கேரக்டர் கிடைத்தால நடிக்க விரும்புவேன் என்று கூறியுள்ளார் ஸ்வேதா.

வி்ல்லத்தனம்

வி்ல்லத்தனம்

ஸ்வேதா மலையாளத்தில் உருவாகியுள்ள ருத்ரசிம்மாசனம் என்ற படத்தில் வி்ல்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

என்னைப் புதுப்பிக்கும் கேரக்டர்

என்னைப் புதுப்பிக்கும் கேரக்டர்

தான் விரும்பும் பாத்திரம் குறித்து அவர் கூறுகையில், என்னைப் புதுப்பிக்கக் கூடிய வகையிலான பாத்திரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். எனது மறுபக்கத்தை வெளிப்படுத்தும் விதமான கேரக்டராக அது இருக்க வேண்டும்.

டிவியில்

டிவியில்

டிவியில் நடிப்பதை நான் வெறுக்கவில்லை. உண்மையில் சினிமாவைப் போலவே டிவிக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். டிவி ஷோக்களில் பங்கேற்பதையும் நான் விரும்புகிறேன் என்றார் அவர்.

நிஜமான பிரசவக் காட்சியில் நடித்தவர்

நிஜமான பிரசவக் காட்சியில் நடித்தவர்

களிமண்ணு என்ற படத்தில் ஸ்வேதா நடித்தபோது அவர் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தார். அவரது பிரசவமும் நிஜமாகவே படமாக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

மகளுடன் சந்தோஷ வாழ்க்கை

மகளுடன் சந்தோஷ வாழ்க்கை

தற்போது தனது மகளுக்காகவும் நிறைய நேரம் ஒ துக்கி அவளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக ஸ்வேதா கூறியுள்ளார்.

English summary
Swetha Menon, the talented actress who is known for her brave career choices, says that she is tired of playing bold roles. The actress was talking in a recent interview given to a popular media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil