»   »  மீண்டும் சூர்யாவுடன் நடிக்க நான் ரெடி, ஆனால்...: ஜோதிகா

மீண்டும் சூர்யாவுடன் நடிக்க நான் ரெடி, ஆனால்...: ஜோதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல கதைக்கு காத்திருப்பதாகவும், கிடைத்தால் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக இருப்பதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சூர்யாவுடன் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஜோதிகா நடிக்காமல் இருந்தார். குழந்தைகள் தியா, தேவ் ஆகியோர் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதையடுத்து 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

I'm waiting: Says Jyotika

36 வயதினிலே ஹிட்டானது. இந்நிலையில் அவர் பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா, ஜோதிகாவை மீண்டும் திரையில் சேர்த்து பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஜோதிகா மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டாலும் சூர்யாவுடன் அவர் நடிப்பதாக தெரியவில்லை.

உங்களையும், சூர்யாவையும் எப்பொழுது பெரிய திரையில் மீண்டும் சேர்ந்து பார்க்கலாம் என்று கேட்டதற்கு ஜோதிகா கூறுகையில்,

நானும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளோம். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்போம் என்றார்.

English summary
Jyotika said that she is ready to act with Suriya again but waiting for the right script to do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil