»   »  டார்ச்சர் செய்யாமல் நல்ல மனைவியாக இருப்பேன், நம்புங்க: தனுஷிடம் கூறிய அமலா பால்

டார்ச்சர் செய்யாமல் நல்ல மனைவியாக இருப்பேன், நம்புங்க: தனுஷிடம் கூறிய அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் உங்களை டார்ச்சர் செய்யாமல் நல்ல மனைவியாக இருப்பேன், நம்புங்கள் என்று அமலா பால் விஐபி 2 இசை வெளியீட்டு விழாவில் தனுஷிடம் தெரிவித்தார்.

படத்தில் நல்ல மனைவியாக இருப்பேன் என்று தான் அமலா பால் கூறினார், நீங்க ஏதாவது நினைத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

விஐபி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய அமலா பால் கூறியதாவது,

தனுஷ்

தனுஷ்

இந்த மேடையில் வந்து நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். தனுஷ் சாருக்கு நன்றி சொல்கிறேன். நன்றி டி. நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தனுஷை டி என்று தான் அழைப்போம்.

விஐபி2

விஐபி2

தனுஷ் சாரின் நம்பிக்கையால் தான் நான் இங்கு வந்து நிற்கிறேன். விஐபி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி டி சார். நீங்கள் என்னை கொல்லவில்லை.

மனைவி

மனைவி

படத்தில் நான் உங்களை டார்ச்சர் செய்யாமல் நல்ல மனைவியாக இருப்பேன், நம்புங்கள். சவுந்தர்யா மேடத்திற்கு நன்றி. நான் பணியாற்றிய இயக்குனர்களில் நீங்கள் சிறந்தவர்.

கஜோல்

கஜோல்

விஐபி 2 படத்தை மிகவும் அழகாக எடுத்துள்ளார் சவுந்தர்யா. கஜோல் மேடம் உங்கள் படங்களை பார்த்து வளர்ந்தேன். அப்படி இருக்கும்போது உங்களுடன் சேர்ந்து நடித்தது மிகப் பெரிய கவுரவம்.

English summary
Amala Paul has promised Dhanush that she will be a good wife who doesn't torture her better half. She said so at the audio launch of VIP 2 held in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil