»   »  ராகிங் பயம்... காலேஜைக் ‘கட்’ அடிப்பதற்காக நடிகையாக மாறிய கவுதமி

ராகிங் பயம்... காலேஜைக் ‘கட்’ அடிப்பதற்காக நடிகையாக மாறிய கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகிங் பயத்தால் இன்ஜினியரிங் கல்லூரியின் துவக்க நாட்களில் கல்லூரிச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே தான் நடிகையானதாகத் தெரிவித்துள்ளார் நடிகை கவுதமி.

80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், பிரபு என பல படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு விலகியவர், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ரீ என்ட்ரி...

ரீ என்ட்ரி...

கமல் ஜோடியாக பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரியான கவுதமி, விரைவில் பிரபு ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

நடிகையான கதை...

நடிகையான கதை...

இந்நிலையில், தனியார் எப்.எம். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவுதமி, தான் நடிகையான கதையை விவரித்துள்ளார். அதில் அவர், "நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தில் நான் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கவில்லை.

முதல்பட வாய்ப்பு...

முதல்பட வாய்ப்பு...

இன்ஜினியரீங் சேர்ந்த எனக்கு முதல் பட வாய்ப்பு அமைந்தது. படக்குழுவினர்கள் உறவினர்கள் என்பதால் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.

ராகிங் பயம்...

ராகிங் பயம்...

நானோ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்கு வேறு காரணம் இருந்தது. அதாவது, புதிதாக கல்லூரியில் காலெடி எடுத்து வைப்பவர்களுக்கு நிச்சயம் ராகிங் பயம் இருக்கும். எனவே, முதல் இரு வாரங்கள் கல்லூரி செல்வதைத் தவிர்க்கவே அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

குருசிஷ்யன்...

குருசிஷ்யன்...

படப்பிடிப்பு முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிய எனக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ரஜினி, பிரபு இணைந்து நடித்த குருசிஷ்யன் பட வாய்ப்பும் கிடைத்தது.

தெளிவான முடிவு...

தெளிவான முடிவு...

அதுவரை சினிமாவைப் பற்றி எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லாமல் இருந்தேன் நான். அதற்குப் பிறகு தான், இனி இது தான் எனது துறை என முடிவெடுத்து நடிக்கத் தொடங்கினேன். அதற்குப் பின் அந்த முடிவில் இருந்து பின் வாங்கவில்லை' என கவுதமி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Gowthami has said that she came to acting to cut her first two weeks of her engineering classes to avoid raging.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil