»   »  நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லையே: த்ரிஷா

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லையே: த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்பொழுதுமே பேசியது இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளரான த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு தளத்தை நாம் தமிழர் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

I've never spoken against Jallikattu: Trisha

த்ரிஷாவை போலீசார் பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் எப்பொழுதுமே ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லை. எனக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிம்புவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

சிம்புவிடம் பீட்டா ஆதரவாளரான த்ரிஷா பற்றி கேட்டதற்கு, த்ரிஷா தெரு நாய்களுக்கு எல்லாம் தன் வீட்டில் இடம் கொடுத்து பராமரிக்கிறார். அதை யாரும் பாராட்டாதபோது இது குறித்து மட்டும் எப்படி கேட்க முடியும் என்றார். த்ரிஷாவும், சிம்புவும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Trisha said she has never spoken against Jallikattu at any given point. She took to twitter to explain her stand on jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil