twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னுடையது நிச்சயம் காதல் திருமணம் தான்...: சூசகமாகச் சொல்லும் அமலாபால்

    |

    சென்னை: மலையாளத்தில் நீலதாமர என்ற படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார் நடிகை அமலா பால்.

    மைனா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலா பால். சிந்து சமவெளி படம் ஏற்படுத்திய சர்ச்சைகளை மறக்கடித்து, அமலா பாலை நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது மைனா.

    அதனைத் தொடர்ந்து, அமலா பால் நடித்த வேட்டை, தெய்வத் திருமகள் மற்றும் தலைவா போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தனது திருமணம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கிராமத்து மைனாக்கள்....

    கிராமத்து மைனாக்கள்....

    தமிழ் படத்தில் நான் நடித்த முதல் படம் கிராமத்து கதையை அடிப்படையாக கொண்டு இருந்தது. அதற்காக நான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்தேன். அதனை தொடர்ந்து கிராமத்து வேடங்களில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.

    சரியான பாதையில்....

    சரியான பாதையில்....

    அது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் அல்லது வர்த்தக ரீதியிலான படமாகவோ இருப்பது குறித்து எனக்கு கவலையில்லை. வேறுபட்ட கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன். நான் செல்லும் பாதை சரியானதென்றே உணர்கிறேன்.

    எனது கனவு...

    எனது கனவு...

    வரலாற்று படம் ஒன்றில் நடித்து விட வேண்டும் என்பதே எனது கனவாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் நடிப்பது மகிழ்ச்சியான விசயம். ஆனால் 3 கலாசாரங்களை அடிப்படையாக கொண்டு தயாராகும் படங்களில் நடிப்பது என்பது சவாலான காரியமாக எனக்கு உள்ளது.

    கலாச்சார வேறுபாடு....

    கலாச்சார வேறுபாடு....

    மொழி என்பது பெரிய அளவில் தடையாக இல்லாவிட்டாலும், கலாசார வேறுபாடு என்பது உள்ளது. 3 வேறுபட்ட ரசனைகளை கொண்ட மக்களுக்கு நமது படம் சென்று சேர்கிறது.

    மும்மொழிப் படங்கள்....

    மும்மொழிப் படங்கள்....

    கதாபாத்திரங்கள் கலாசார வேறுபாடுகளை பிரதிபலிப்பவையாக இருக்கும். மலையாள படங்களில் மண்ணின் பெருமையை சார்ந்த கதாபாத்திரங்களும், தெலுங்கு படங்களில் மாயாஜால, தந்திர காட்சிகள் போன்றவை கொண்ட கதாபாத்திரங்களும், தமிழ் படங்களில் அவை இரண்டும் கலந்த வகையிலும் கதாபாத்திரங்கள் அமையும். எனவே, வேறுபட்ட கலாசாரங்களை கொண்ட 3 மொழி படங்களிலும் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

    புத்தாண்டு கொண்டாட்டம்....

    புத்தாண்டு கொண்டாட்டம்....

    புத்தாண்டு தின கொண்டாட்டத்தை எனது குடும்பத்துடன் ரோம், பார்சிலோனா, வெனீஸ் மற்றும் பாரீஸ் ஆகிய நாடுகளில் செலவிட்டேன். மலையாலத்தில் ஒரு இந்தியன் பிரணயகதா படத்தின் வெற்றி புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக இனிமை சேர்த்தது.

    என் திருமணம்....

    என் திருமணம்....

    எனக்கு 22 வயது தான் ஆகிறது. எனக்காக திருமணம் சற்று காத்திருக்கும். திருமணம் நடைபெறும்போது அது பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருக்காது. அதில் நான் உறுதியாக உள்ளேன்.

    காதல் திருமணமா....

    காதல் திருமணமா....

    எனக்கு வருங்கால கணவரை குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும். எனக்கு தெரியாத ஒரு நபருடன் மீதமுள்ள வாழ்க்கையை கழிக்க என்னால் முடியாது.

    புதிய படக்கள்....

    புதிய படக்கள்....

    தற்போது தமிழ் மொழியில் 2 படங்களிலும் மற்றும் தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறேன். மலையாளத்தில் லைலா ஓ லைலா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.

    2வது படம்....

    2வது படம்....

    இந்த படத்தில் மோகன்லால் உடன் 2-வது முறையாக நடிக்கிறேன். படத்தலைப்பின் கதாபாத்திரத்திலேயே நான் நடிக்க உள்ளேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Amala paul forayed inro in to Tamil films with a de-glam role in Myna and later turned to ultra glam roles in big films. About her makeover she says, ' I feel I am in right track. Now, I have one dream, to be a part of a period film, an era which is unknown to us'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X