»   »  முதல் படம் பிளாப் ஆனதால் ராசியில்லாதவள் என ஒதுக்கினார்கள்: ஸ்ருதி ஹாஸன்

முதல் படம் பிளாப் ஆனதால் ராசியில்லாதவள் என ஒதுக்கினார்கள்: ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தான் நடித்த முதல் படம் ஓடாததால் தன்னை ராசியில்லாத நடிகை என்று கூறி ஒதுக்கியதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் மகள் என்றாலும் அவர் உதவி இல்லாமல் சுயமாக வாழ்வில் முன்னேற வேண்டும் என்று இருப்பவர் ஸ்ருதி ஹாஸன். தந்தை, தாய் சரிகா வழியில் திரைத்துறைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது சினிமா பயணம் பற்றி கூறுகையில்,

பள்ளி

பள்ளி

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நானே சுதந்திரமாக முடிவு எடுத்தேன். வகுப்பில் நடிப்பதையோ, வீட்டு பாடம் குறித்தோ வீட்டில் உள்ளவர்களிடம் கூற மாட்டேன். நானே வீட்டுப்பாடம் செய்வேன். அப்போதே கற்பனை செய்து கதை சொல்வேன்.

நடிகை

நடிகை

பள்ளியில் படிக்கும் போதே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. நடிகையாக வேண்டும், இசை பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் சிறு வயதிலேயே தனியாக முடிவு எடுத்தது தற்போது பெரும் உதவியாக உள்ளது.

லக்

லக்

லக் என்ற இந்தி படம் மூலம் நடிகையானேன். அந்த படம் ஓடவில்லை. உடனே நான் ராசியில்லாத நடிகை என்று கூறி ஒதுக்கினார்கள். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நடித்து இன்று முன்னணி நாயகியாக உள்ளேன்.

கவர்ச்சி

கவர்ச்சி

சினிமாவில் கவர்ச்சி முக்கியம். ஆனால் அந்த கவர்ச்சியை ஆயுதமாக பயன்படுத்த எனக்கு பிடிக்காது. ரசிகர்கள் எனக்கு முக்கியம். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்கிறேன்.

English summary
Shruti Haasan said that people branded her unlucky after her debut movie Luck didn't do well in the box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil