»   »  குட்டையா, குண்டா இருக்கும் நீ மாடல் ஆகணுமா?: சன்னி சந்தித்த அவமதிப்பு

குட்டையா, குண்டா இருக்கும் நீ மாடல் ஆகணுமா?: சன்னி சந்தித்த அவமதிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நீ குண்டாக, குட்டையாக இருப்பதால் மாடல் அழகி ஆக முடியாது என்று சிலர் நடிகை சன்னி லியோனிடம் தெரிவித்தார்களாம்.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் சன்னி நியூயார்க்கில் நடந்த ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

மாடல்

மாடல்

நான் சிறு பிள்ளையாக இருந்ததில் இருந்தே எனக்கு மாடல் ஆக வேண்டும் என்று ஆசை. எனக்கு 18 வயதானபோது மாடலிங் செய்ய முயன்றேன். ஆனால் நான் குட்டையாக, குண்டாக இருப்பதாகக் கூறி நிராகரித்துவிட்டார்கள்.

ராம்ப்வாக்

ராம்ப்வாக்

மாடலிங் செய்ய லாயக்கு இல்லை என்று நிராகரிக்கப்பட்ட அதே குட்டையான, குண்டான சன்னி தான் இன்று நியூயார்க் ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்துள்ளேன். ஷோ ஸ்டாப்பராகவும் ஆகியுள்ளேன்.

பயம்

பயம்

ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்யும்போது கால் தடுக்கி கீழே விழுந்துவிடுவேனோ என்று பயமாக இருந்தது. என் பல ஆண்டு கனவு நனவாகிவிட்டது. இது நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.

பெருமை

பெருமை

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ரேஷ்மா குரேஷி ராம்ப் வாக் செய்தார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரின் துணிச்சலை நினைத்து பெருமைப்படுகிறேன்.

English summary
She has become the first Bollywood actress to walk the ramp at New York Fashion Week, but Sunny Leone reveals in the initial stage of her career, she was called “too fat” to be a model.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil