»   »  வெங்கட் பிரபு இப்படி என்ன தப்பா யூஸ் பண்ணிட்டாரே: மனிஷா யாதவ் குமுறல்

வெங்கட் பிரபு இப்படி என்ன தப்பா யூஸ் பண்ணிட்டாரே: மனிஷா யாதவ் குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் வெங்கட்பிரபு - மனிஷா யாதவ்- வீடியோ

பெங்களூர்: சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ் இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார் தெரிவித்துள்ளார்.

வழக்கு எண் 18/9 படம் மூலம் நடிகையானவர் மனிஷா யாதவ். அவர் சென்னை 600028 II படத்தில் சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதில் இருந்து அவரை அனைவரும் சொப்பண சுந்தரி என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து மனிஷா கூறியிருப்பதாவது,

சொப்பண சுந்தரி

சொப்பண சுந்தரி

சொப்பண சுந்தரி ஸ்பெஷலான பாடல் என்று மட்டும் தான் என்னிடம் கூறினார்கள். அது குத்துப்பாட்டு என்று யாருமே என்னிடம் தெரிவிக்கவில்லை.

எரிச்சல்

எரிச்சல்

மக்கள் என்னை சொப்பண சுந்தரி என்று அழைப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நான் பேசிய சில வசனங்கள் தவறாகிவிட்டது.

கவலை

கவலை

இது குத்துப்பாடலா என்று நான் கேட்டேன். குத்துப்பாட்டு என்று கூறாமல் என்னை ஆட வைத்தது பற்றி தெரிந்து என் இதயம் நொறுங்கிவிட்டது. வெங்கட் பிரபு சாருடன் நல்ல முறையில் பழகினேன். இந்த பாடல் படத்தின் பாதையை மாற்றும் முக்கிய பாடல் என்று மட்டுமே அவர் என்னிடம் கூறினார்.

நம்பிக்கை

நம்பிக்கை

நான் நடித்துள்ள ஒரு குப்பை கதை படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. வால்பாறையில் தேயிலை பறிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். நாங்கள் ஒரு குப்பத்தில் ஷூட்டிங் நடத்தியபோது அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினருக்கு மலேரியா வந்தது. பல கஷ்டப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் மூலம் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் மனிஷா.

English summary
Manisha Yadav said that director Venkat Prabhu didin't tell her that Soppana Sundari was an item song. She added that she felt heartbroken as she was taken for granted in Chennai 600028 II: Second Innings.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X