»   »  'மணி சார் படத்துல நடிக்கணும்' கொக்குபோல காத்திருக்கும் அலியா பட்

'மணி சார் படத்துல நடிக்கணும்' கொக்குபோல காத்திருக்கும் அலியா பட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மணிரத்னம் படத்தில் நடிக்க தான் காத்துக் கொண்டிருப்பதாக பாலிவுட் பியூட்டி அலியா பட் கூறியிருக்கிறார்.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தனது ஹீரோயின்களை அழுத்தமாகவும், அழகாகவும் காட்டக் கூடியவர் என்பதால் பெரும்பாலான நடிகைகள் இவரின் படங்களில் நடிப்பதை லட்சியமாக கொண்டிருக்கின்றனர்.

I Wish to work with Maniratnam says Alia Bhatt

தற்போது இந்த பட்டியலில் பாலிவுட் பியூட்டி அலியா பட்டும் இணைந்திருக்கிறார். கடந்தாண்டு வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானுக்கு எதிராக அலியா பட் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துல்கருடன் ஜோடி போடும் அதிர்ஷ்டம் நித்யா மேனனுக்கே கிடைத்தது. சரி இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும், வருண் தவானுடன் இணைந்து நடிக்கலாம் என்று அலியா நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால் ஓகே ஜானு என்ற பெயருடன் இந்தியில் ரீமேக்காகும் ஓ காதல் கண்மணியில் நடிக்கும் வாய்ப்பானது, ஸ்ரத்தா கபூர் -ஆதித்யா ராய் கபூருக்கு கிடைத்திருக்கிறது.

I Wish to work with Maniratnam says Alia Bhatt

இதனால் மணிரத்னத்தின் கதையில் நடிக்கும் வாய்ப்பும் அலியாவிடம் இருந்து நழுவி விட்டது. இந்நிலையில் சமீபத்திய விழா ஒன்றில் "எனது அப்பா மகேஷ் பட் தூண்டுதல் காரணமாகவே தென்னிந்தியப் படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.

மணி சாரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒருவேளை நான் தென்னிந்திய சினிமாவில் நடித்தால் கண்டிப்பாக அது மணி சாரின் படமாகத் தான் இருக்கும்" என்று அலியா பட் தெரிவித்திருக்கிறார்.

English summary
"In South India I Wish to work with Mani Ratnam Sir Movie" Bollywood Actress Alia Bhatt Reveals her Desire in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil