»   »  மரியாதையே இல்லாத டோலிவுட்டில் இனி நடிக்கவே மாட்டேன்: ராதிகா ஆப்தே

மரியாதையே இல்லாத டோலிவுட்டில் இனி நடிக்கவே மாட்டேன்: ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மரியாதை சற்றும் இல்லாத தெலுங்கு திரைஉலகம் எடுக்கும் படங்களில் இனி தான் நடிக்கப் போவது இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ராதிகா நிர்வாணமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் டோலிவுட் எனப்படும் தெலுங்கு திரை உலகம் பற்றி குறை கூறியுள்ளார்.

லயன்

லயன்

பாலகிருஷ்ணா ஜோடியாக ராதிகா ஆப்தே லயன் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

ராதிகா

ராதிகா

நான் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளேன். ஆனால் நான் அதிகம் போராடியது தெலுங்கு திரை உலகில் தான் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

தெலுங்கு திரை உலகம் ஆணாதிக்கம் மிக்கது. அங்கு பணிபுரிவது என்பது மிகவும் கடினமாக உள்ளது என்கிறார் ராதிகா.

மாட்டேன்

மாட்டேன்

தெலுங்கு திரை உலகில் நடிகைகளுக்கு மரியாதையே இல்லை. நடிகைகள் முறையாக நடத்தப்படுவது இல்லை. இனி நான் தெலுங்கு படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று குமுறுகிறார் ராதிகா ஆப்தே.

English summary
Radhika Apte told that she won't act in telugu movies again as there is no respect for the actresses in Tollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil