»   »  நான் நடித்த படத்தை நானே பார்க்க மாட்டேன், அந்த அளவுக்கு...: ஆண்ட்ரியா

நான் நடித்த படத்தை நானே பார்க்க மாட்டேன், அந்த அளவுக்கு...: ஆண்ட்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் நடித்துள்ள அவள் படத்தை நானே பார்க்க மாட்டேன் என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அவள். சித்தார்த் நடித்ததோடு மட்டும் அல்லாமல் படத்தை தயாரித்தும் உள்ளார்.

அவள் படம் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி ரிலீஸாகிறது.

அவள்

தமிழ், இந்தி, தெலுங்கில் ரிலீஸாகும் அவள் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரே சும்மா மிரட்டலாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

சென்னையில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வித்தியாசமான கதைகளாக என்னை தேடி வருகிறது என்றார் ஆண்ட்ரியா.

சித்தார்த்

சித்தார்த்

வித்தியாசமான கதைகளில் நடிப்பதன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவள் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி என்று ஆண்ட்ரியா பேசினார்.

பயங்கரம்

பயங்கரம்

அவள் போன்ற த்ரில்லர் படம் என்றாலே எனக்கு பயம். படம் பயங்கரமாக வந்துள்ளது. பார்ப்பவர்களை நிச்சயம் பயப்பட வைக்கும். நான் இந்த படத்தை பார்க்கவே மாட்டேன் என்று ஆண்ட்ரியா கூறினார்.

English summary
Actress Andrea said that she won't watch her thriller movie Aval as it is very scary.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil