»   »  பாகுபலி படத்தில் நடிக்க கொலையும் செய்வேன்: தமன்னா

பாகுபலி படத்தில் நடிக்க கொலையும் செய்வேன்: தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுப்பேன், தேவைப்பட்டால் கொலையும் செய்வேன் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் தமன்னாவின் மார்க்கெட் சரிந்தபோது தான் அவருக்கு எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் பாகுபலி பற்றி தமன்னா கூறுகையில்,

பாகுபலி

பாகுபலி

என் கெரியர் மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் பல தோல்விகளை சந்தித்த நேரத்தில் பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போன்று இருந்தது.

எதிர்பாராதது

எதிர்பாராதது

பாகுபலி பட வாய்ப்பு நான் எதிர்பாராதது. என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகுபலி இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.

கொலையும் செய்வேன்

கொலையும் செய்வேன்

பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்துவிடும். பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுப்பேன். ஏன் தேவைப்பட்டால் கொலையும் செய்வேன்.

ரிலீஸ்

ரிலீஸ்

பாகுபலி 2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்திற்காக பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என அனைவரும் கடினமாக உழைத்து வருகின்றனர்.

English summary
Actress Tamanna said that she would die and even kill if required to be part of 'Baahubali'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil