»   »  நான் விஜய் ரசிகையாக்கும்: ஸ்ரீ திவ்யா

நான் விஜய் ரசிகையாக்கும்: ஸ்ரீ திவ்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்கள் ஊதா கலர் ரிப்பன் நாயகியை கொண்டாடி வருகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டது, விஜயைப் பற்றி ஸ்ரீ திவ்யா சொன்ன அந்த வரிகளைத்தான்.

சன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் பேசினார் நடிகை ஸ்ரீ திவ்யா. உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் விஜய் என்று கூறினார். அதோடு மட்டுமல்லாது விஜயை புகழோ புகழ் என்று புகழ்ந்தார்.

தெலுங்கு நாயகி

தெலுங்கு நாயகி

1987ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த ஶ்ரீதிவ்யா ‘பஸ் ஸ்டாப்' உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

ஊதா கலர் ரிப்பன்

ஊதா கலர் ரிப்பன்

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் அறிமுகமானார். ஒரே படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் ஓஹோ என்று உயர்ந்தார். ‘ஊதா கலரு ரிப்பன்' அவரை உச்சத்திற்கு உயர்த்தியது.

வரிசையில் படங்கள்

வரிசையில் படங்கள்

தமிழில் தொடர்ந்து ‘ஜீவா' படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. விக்ரம் பிரபு உடன் 'வெள்ளக்காரதுரை', சிவகார்த்திக்கேயனுடன் ‘காக்கி சட்டை', ஜி.வி. பிரகாஷ் குமாருடன் 'பென்சில்', மற்றும் ‘ஈட்டி' என இப்போது பிஸியாக இருக்கிறார் ஸ்ரீ திவ்யா.

வெள்ளைக்கார துரை

வெள்ளைக்கார துரை

இதில் ‘வெள்ளக்காரதுரை' படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிருஸ்துமஸ் நாளில் வெளியாகிறது. இதில் ஹீரோ உடன் கூடுதல் நெருக்கமாகவும், கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறாராம்.

விஜய் ரசிகை

விஜய் ரசிகை

இந்நிலையில் சமீபத்தில் சன்டிவியில் பேட்டியளித்த ஸ்ரீதிவ்யா தன்னுடைய பேவரைட் ஹீரோ நடிகர் விஜய் என தெரிவித்துள்ளார்.

விஜய் எனர்ஜிவிஜய் எனர்ஜி

விஜய் எனர்ஜிவிஜய் எனர்ஜி

காரணம் கேட்டதற்கு ''விஜய் எனர்ஜியான நடிகர், மேலும் எனக்கு அவரது நடனம் மிகவும் பிடிக்கும்'' என்று கூறினார்.

‘தல’யை சொல்றப்ப

‘தல’யை சொல்றப்ப

பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் இன்றைக்கு பெரும்பாலான நடிகைகள் அஜீத் என்றுதான் கூறுகின்றனர். ஆனால் ஸ்ரீ திவ்யாதான் அவர்களிடம் இருந்து மாறுபட்டு விஜயை கூறியுள்ளார். அப்போ விஜய்யின் அடுத்த பட ஹீரோயின் ஸ்ரீ திவ்யாதான் என்று அடித்துக் கூறுகின்றனர் விஜய்யின் ரசிகர்கள்.

English summary
Sri Divya says,I Am a Fan of Ilayathalapathy Vijay! I Like Vijay's Dance and Energy Level says Sri Divya!One More Pretty Young Actress Joins the Fan of Ilayathalapathy Vijay.
Please Wait while comments are loading...