»   »  தொபுக்கடின்னு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம் இலியானாவுக்கு!

தொபுக்கடின்னு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம் இலியானாவுக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது சினிமா வாழ்க்கைப் பயணம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை பற்றி யோசிக்கவே படங்களில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் இலியானா. கோடிக்கணக்கில் அவர் சம்பளம் கேட்டபோதிலும் தயாரிப்பாளர்கள் கொட்டிக் கொடுத்து அவரை நடிக்க வைத்தனர். இந்நிலையில் 2012ம் ஆண்டு பர்ஃபி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் இலியானா.

அதன் பிறகு பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார் அவர். இந்நிலையில் தனது சினிமா பயணம் பற்றி இலியானா கூறுகையில்,

நடிக்கவில்லை

நடிக்கவில்லை

ஹேப்பி என்டிங்(2014) படத்திற்கு பிறகு நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இது ஒரு பிரேக் எனலாம். என்னைத் தேடி வரும் கதாபாத்திரங்கள் திருப்தியாக இல்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

பிரேக்

பிரேக்

நான் நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் திரையுலகை விட்டு விலகவில்லை. என் திரையுலக பயணம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

படம்

படம்

என்னைத் தேடி நல்ல கதை வந்துள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன். அது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது.

ஃபேஷன் ஷோ

ஃபேஷன் ஷோ

நான் அதிர்ஷ்டசாலி. ஒரு பிராண்டின் சார்பில் ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் செய்வது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். ராம்ப் வாக் செய்வது கௌரவமான விஷயம். மாடல்கள் அருமையாக ராம்ப் வாக் செய்கிறார்கள். நான் அவர்களிடம் இருந்து ஆலோசனை பெறுவது உண்டு.

ஷாப்பிங்

ஷாப்பிங்

நான் ஆன்லைன் மூலம் தான் ஷாப்பிங் செய்கிறேன். நான் என்ன உடை அணிவது என்பது என் மூடைப் பொருத்தது. என்ன அணிந்தாலும் அது சிம்பிளாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன் என்றார் இலி.

English summary
Ileana D'Cruz, who made her Bollywood debut with the Ranbir Kapoor-starrer Barfi! and was last seen on the big screen in Saif Ali Khan-starrer Happy Ending, says she's on a break from movies to think about where her career is heading.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil