»   »  இதை கேட்டீங்களா?: இலியானாவுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லையாம்

இதை கேட்டீங்களா?: இலியானாவுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லையாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இலியானா சுபயோக சுபதினத்தில் பாலிவுட் பக்கம் சென்றார். அதோடு அங்கேயே தங்கிவிட்டார். பாலிவுட்டில் தங்கிய போதிலும் அவர் எதிர்பார்த்தது போன்று வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இலியானா அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்துள்ள ருஸ்தம் படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது. இது குறித்து இலியானா கூறுகையில்,

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார் போன்ற திறமையான நடிகருடன் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு பெண் தனது கணவரை ஏமாற்றுவது போன்ற படம் தான் ருஸ்தம். இது இந்தி திரையுலகில் அரிது.

காதல்

காதல்

காதலித்து உறவில் இருந்து ஒருவரை பிரிவது என்பது அவரவருடைய தனிப்பட்ட விஷயம். அது போன்று எனக்கு நடந்தால் நான் அந்த நரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அதை நினைத்து வருந்துவதை விட அடுத்த வேலையை கவனிக்கவே விரும்புகிறேன்.

காதல் முறிவு

காதல் முறிவு

என் வாழ்விலும் காதல் முறிவுகள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் சுமூகமாக பிரிந்துள்ளோம். உறவு கசந்தால் பழிவாங்குவது சரி அல்ல. அதற்காக முன்னாள் காதலர்களுடன் நட்பாக இருக்குமாறு கூறவில்லை. நான் என்னுடைய எந்த முன்னாள் காதலருடனும் நட்பாக இல்லை.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதற்காக கடவுளை நம்புபவர்களை நான் எதிர்க்கவில்லை என்று இலியானா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Ileana said that she doesn't believe in supernatural power but in positive energy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil