»   »  பாலிவுட்டில் மவுசு இல்லை: மீண்டும் டோலிவுட்டுக்கே திரும்பும் இலியானா

பாலிவுட்டில் மவுசு இல்லை: மீண்டும் டோலிவுட்டுக்கே திரும்பும் இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் வாய்ப்பு இல்லாததால் இலியானா மீண்டும் தெலுங்கு திரை உலகிற்கே திரும்ப முடிவு செய்துள்ளாராம்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இலியானா தேவதாசு என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையானார். ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகவும், இஞ்சி இடுப்பழகியாகவும் இருக்கும் இலியானாவுக்கு டோலிவுட் சிவப்புக் கம்பளம் விரித்தது.

இதையடுத்து இலியானா ஜாகையை ஹைதராபாத்துக்கு மாற்றி தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

கோடி

கோடி

இலியானா டோலிவுட்டின் முன்னணி நாயகியாக, முடிசூடா ராணியாக வலம் வந்தார். அவர் எத்தனை கன்டிஷன் போட்டாலும், கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் சிரித்த முகத்துடன் அவரை ஒப்பந்தம் செய்தனர்.

தமிழ்

தமிழ்

தெலுங்கு படங்களில் நடித்த இலியானா கேடி படம் மூலம் கோலிவுட்டுக்கும் வந்தார். அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார்.

பாலிவுட்

பாலிவுட்

தெலுங்கு திரை உலகில் செட்டில் ஆன இலியானாவுக்கு பாலிவுட் செல்லும் ஆசை வந்தது. ஃபர்பி படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார் இலி. அவரது நடிப்பை பார்த்து அமிதாப் பச்சனே ஆச்சரியப்பட்டு புகழ்ந்தார். இலிக்கோ உச்சி குளிர்ந்துவிட்டது.

ஃபர்பி

ஃபர்பி

ஃபர்பி படத்தை அடுத்து இலியானா ஹைதராபாத் வந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு டோலிவுட்டுக்கு கும்பிடு போட்டுவிட்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து 3 இந்தி படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு இல்லை.

மீண்டும் டோலிவுட்

மீண்டும் டோலிவுட்

இனியும் பாலிவுட்டை நம்பி புண்ணியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள இலி மீண்டும் டோலிவுட் வருகிறார். இதில் முதல்கட்டமாக நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலாவின் மகன் அகில் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட உள்ளார்.

டிரெய்லர் தான்

டிரெய்லர் தான்

குத்தாட்டம் போடுவதற்கே இலி ஏகப்பட்ட சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் அளித்துள்ளார்களாம். இந்த குத்துப்பாட்டை வைத்து ஹீரோயின் வாய்ப்புகளை பெற்று மீண்டும் டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர திட்டமிட்டுள்ளார் இலியானா.

நல்ல நேரம்

நல்ல நேரம்

இலி டோலிவுட்டுக்கு வர நினைத்துள்ள நேரம் அவருக்கு நல்ல நேரம் ஆகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நாயகிகளான சமந்தா, காஜல், ஸ்ருதி தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது இலியானாவுக்கு நல்லதாகிவிடும் போல.

English summary
Ileana has decided to return to Tollywood as she is not able to keep up with Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil