»   »  இலியானாவின் பந்தா!

இலியானாவின் பந்தா!

Subscribe to Oneindia Tamil

இலியானா என்ற பெயரைக் கேட்டாலே தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் கடு கடுவென்றாகி விடுகிறார்கள்.

ஆந்திராவையே தனது அலையால் கலக்கிக் கொண்டிருந்தவர் திரிஷா. ஆனால் தனது இடையால் திரிஷாவின் மார்க்கெட்டையே கலகலக்க வைத்தவர் இலியானா.

கொடியிடையால் கிடுகிடுவென மார்க்கெட்டின் உச்சிக்குச் சென்ற இலியானா, திரிஷாவை ஓரம் கட்டி மறுபடியும் தமிழ் திரையுலகத்தின் பக்கம் அவரைத் திருப்பி விட்டார்.

இலியானாவின் இடை அசைவில் தெலுங்கு ரசிகர்கள் மயங்கி விழுந்ததால், தெலுங்குப் படத் தயாரிப்பாளர்களும் திரிஷாவைத் திராட்டில் விட்டு விட்டு இலியானா பக்கம் பொட்டிகளைத் திருப்பி விட்டனர்.

தெலுங்கில் படு பிசியாகி விட்டதால் தமிழில் தன்ைனத் தேடி வந்த வாய்ப்புகளை உதாசீனப்படுதத் தொடங்கினார் இலியானா. இப்போதைக்குத் தெலுங்கு மட்டும்தான், மற்ற மொழிகளுக்கு பெரிய நோ என்று அடாவடியாக கூறி வந்தார் இலியானா.

அப்படியும் விடாமல் சில தயாரிப்பாளர்கள் இலியானாவைத் தேடிப் போய் தெலுங்கு சம்பளத்தைத் தருகிறோம். நடிக்க வாருங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டனராம்.

ஆனால் அவர்களைப் பார்த்து தமிழ் சினிமாவா, ஹய்யோ, ஹய்யோ எனது மார்க்கெட் ரேஞ்சே புரியாமல் பேசுறீங்களே என்று இளக்காரமாக பேசியுள்ளார் இலியானா. அத்தோடு நில்லாமல், இனிமே இந்தப் பக்கமே வராதீங்க என்று அடிக்காத குறையாக விரட்டி விட்டு விட்டாராம்.

இதனால் இலியானா மீது தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் படு கடுப்பாக உள்ளனராம். யானைக்கு ஒரு காலம் என்றால் எலிக்கு ஒரு காலம். இலியானாவுக்கும் சறுக்கல் வரும், அப்போது தமிழ் பக்கம் சாய்ந்துதானே ஆக வேண்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று பற்களை பரபரவென்று கடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அடடே!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil