பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது நல்ல முடிவு.. நடிகை ஓவியா ட்வீட்.. ஆனால், ரசிகர்களின் கவலையே வேறு?

சென்னை: சமூக வலைதளங்களில் தனது கருத்தை பல முறை பலமாக முன் வைத்து வருபவர் நடிகை ஓவியா.

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது நல்ல முடிவு என தற்போது நடிகை ஓவியா ஓப்பனாக போட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியளவில் MarriageAge என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், தனது நிலைப்பாட்டை நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

ஓப்பனாக பேசும் ஓவியா

ஓப்பனாக பேசும் ஓவியா

எந்தவொரு கருத்தையும் ஒளிவு மறைவின்றி ரொம்பவே ஓப்பனாக சொல்வது நடிகை ஓவியாவின் இயல்பாக இருந்து வருகிறது. பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஓவியாவின் ரியல் கேரக்டர் பிடித்துப் போகவே ரசிகர்கள் அவருக்கு ஆர்மி அமைத்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு ஓப்பனான கருத்தை நடிகை ஓவியா முன் வைத்துள்ளார்.

பெண்ணின் திருமண வயது

பெண்ணின் திருமண வயது

பெண்ணின் திருமண வயது 18ல் இருந்து 21ஆக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தீர்மானித்த நிலையில், அதற்காக ஒரு செயற்குழுவை ஜெயா ஜேட்லி தலைமையில் அமைத்து மத்திய அமைச்சரவை அந்த தீர்மானத்திற்கு ஒப்புதலும் கொண்டு வந்தது. பெண்ணின் திருமண வயதை மாற்றும் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் #MarriageAge எனும் ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகின்றன.

ஓவியா ஆதரவு

ஓவியா ஆதரவு

இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு என நடிகை ஓவியா தனது மனப்பூர்வமான ஆதரவை அளித்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை ஓவியாவின் இந்த கருத்துக்கும் கமெண்ட் பக்கத்தில் ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.

எந்த தியாகமும் செய்ய வேண்டாம்

எந்த தியாகமும் செய்ய வேண்டாம்

பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள சட்டமே அனுமதி அளித்தால் அவர்களால் கல்லூரி படிப்பு, கனவு வேலை என பல விஷயங்களை தியாகங்களை செய்து விடும் நிலை உருவாகி வருவதை குறிக்கும் விதமாக இதன் மூலம் பெண்கள் எந்தவொரு தியாகத்தையும் செய்ய வேண்டாம் என்றும் சிறிய வயதிலேயே குடும்ப பாரம் எனும் பெரிய சுமைகளை சுமக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களின் கவலை

ரசிகர்களின் கவலை

ஆனால், நடிகை ஓவியாவின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் பிக் பாஸ் ஒடிடிக்கு கண்டிப்பா வரீங்களா ஓவியா? என்கிற கேள்விகள் தான் நிறைந்துள்ளன. மேலும், பிக் பாஸ் ஒடிடிக்கு வந்தா நீங்கதான் டைட்டில் வின்னர் என்றும் ஓவியா ஆர்மியினர் கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X