»   »  வரலட்சுமி சொன்ன 'இங்கிதம் இல்லாத' நபரின் படத்தில் தற்போது நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

வரலட்சுமி சொன்ன 'இங்கிதம் இல்லாத' நபரின் படத்தில் தற்போது நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அப்பா மலையாளம் ரீமேக்கில் வரலட்சுமிக்கு பதிலாக இனியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமுத்திரக்கனி தான் இயக்கி, நடித்த அப்பா படத்தை ஜெயராமை வைத்து ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் செய்து வருகிறார்.

ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் வரலட்சுமி சரத்குமார். ஜெயராமுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தார்.

வரலட்சுமி

வரலட்சுமி

இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று கூறி வரலட்சுமி ஆகாச மிட்டாயீ படத்தில் இருந்து வெளியேறினார்.

மஹா சுபைர்

மஹா சுபைர்

வரலட்சுமி சொல்லும் அந்த இங்கிதம் இல்லாத ஆணாதிக்கம் மிக்க நபர் யார் என்று ஆளாளுக்கு யோசிக்க படத்தின் தயாரிப்பாளர் மஹா சுபைர் என்று தெரிய வந்தது.

இனியா

இனியா

வரலட்சுமி படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அவர் கதாபாத்திரத்தில் நடிக்க இனியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்த இனியா தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கைது

கைது

படப்பிடிப்பு நடந்த கொச்சி ஹோட்டலில் தயாரிப்பாளர் மஹா சுபைரை 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் குடிபோதையில் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Iniya has replaced Varalakshmi Sarathkumar in Samuthirakani's Malayalam directorial debut Akasha Mitayee starring Jayaram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil