»   »  அந்த ஒத்தக் "குத்து" டான்ஸில்.. அத்தனை மனங்களையும் அள்ளிப் போட்ட ரித்திகா!!

அந்த ஒத்தக் "குத்து" டான்ஸில்.. அத்தனை மனங்களையும் அள்ளிப் போட்ட ரித்திகா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகையாக மாறியிருக்கிறார் ரித்திகா சிங்.ஒரே படத்தில்.. ஓஹோவென ரசிகர்களின் மனங்களைக் கைப்பற்றி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட இளசுகளை டெபாசிட் இழக்க வைத்து விட்டது ரித்திகாவின் அட்டகாசமான, திறமையான நடிப்பு.

Select City
Buy Irudhi Suttru (U) Tickets

துரோகி படத்தின் மூலம் தோல்வியை ருசித்த இயக்குநர் சுதா கொங்கராவின் 2 வது படைப்பாக வெளியாகியிருக்கும் படம் தான் இறுதிச்சுற்று. முதல் படம் பெரியளவில் தோல்வி அடைந்த போதும் கூட மனம் தளராது இறுதிச்சுற்றின் வெற்றியால் இந்தியளவில் கவனம் பெற்றிருக்கிறார் சுதா.


அதே போல இந்தப் படத்தின் அறிமுக நடிகையான ரித்திகா சிங்கிற்கும் ஒரு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது மாதவனின் இறுதிச்சுற்று. இறுதிச்சுற்று படத்தின் வெற்றியால் இப்படத்தில் இடம்பிடித்த அனைவரும் ஒரே நாளில் வெளிச்சத்திற்கு வந்து விட்டனர்.


பாக்ஸிங் கதைகள்

பாக்ஸிங் கதைகள்

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை பாக்ஸிங் பற்றிய கதைகள் இதுவரை பெரியளவில் வந்ததில்லை. வெளியான ஒருசில படங்களும்(பத்ரி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பூலோகம்) செண்டிமெண்ட், காதல் என்ற வழக்கமான மசாலா கலந்தே வெளியாகின. இதில் பூலோகம் மட்டும் சர்வதேச சந்தைகளின் வியாபார யுக்திகளை பொட்டில் அடித்தது போன்று எடுத்துரைத்திருந்தது.


இறுதிச்சுற்று கதை

இறுதிச்சுற்று கதை

இந்தியாவில் இத்தனை கோடி மக்கள் இருந்தும் கூட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நம்மால் ஏன் சாதிக்க முடியவில்லை இதுதான் படத்தின் ஒருவரிக் கதை. இந்த ஒருவரியை எடுத்துக் கொண்டு அதில் சிறிது காதல் பெரும்பாதியான அரசியல் கலந்து எந்தவித சமரசமும் இல்லாமல் இறுதிச்சுற்றினை முதன்மை சுற்றாக கொடுத்திருக்கிறார் சுதா.


ரித்திகா சிங்

ரித்திகா சிங்

பாக்ஸிங் பற்றிய கதை என்பதால் இந்தியா முழுவதும் பயணம் செய்து உண்மையான பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங்கை இந்தப் படத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சுதா. 2009 ம் ஆண்டு நடந்த ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர் ரித்திகா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

ரித்திகா சிங்கின் இயல்பான நடிப்பைப் பார்க்கும் பலரும் இவரை ஒரு தேர்ந்த நடிகையாகவே கருதுகின்றனர். ஆனால் இதுதான் ரித்திகாவிற்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயல்பில் ஒரு பாக்ஸராக இருந்தாலும் கூட இந்தப் படத்தில் நடிப்பதற்கு மிகவும் சிரமப் பட்டிருக்கிறார் ரித்திகா. பின்னர் மாதவன் நடிப்புப் பயிற்சி கற்றுக் கொடுக்க அவரும் இயல்பாக அதனைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.


குப்பத்துப் பெண்

குப்பத்துப் பெண்

மும்பையைச் சேர்ந்த ரித்திகா இந்தப் படத்தில் குப்பத்துப் பெண்ணாக நடித்து பலரையும் அசத்தி விட்டார். இந்தக் காட்சிகள் உண்மையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக சென்னையின் சுனாமி பாதித்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர்.


தனுஷ்

தனுஷ்

நடிகர்கள் பெரிய நடிகர்களின் ரசிகர்களாக நடிப்பது பேஷனாக விட்டது. அதே போல இந்தப் படத்தில் தனுஷின் ரசிகையாக நடித்திருக்கிறார் ரித்திகா. வா மச்சானே பாடலில் இயல்பான குத்தாட்டம், ஏ சண்டைக்காராவில் ரொமான்ஸ் என்று டான்ஸிலும் பட்டையைக் கிளப்பியிருக்கு பொண்ணு. இயல்பான குப்பத்துப் பெண், பாக்ஸர் 2 விதமான நடிப்பிலும் மிளிர்ந்ததில் இயக்குநர்களின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ரித்திகா மாறுவார் என்பது சினிமா விமர்சகர்களின் எண்ணமாக இருக்கிறது.


மாதவன்

மாதவன்

சொல்லப் போனால் இந்தப் படத்தில் நடித்த மாதவனைத் தான் ரசிகர்கள் கொண்டாட வேண்டும். ஆனால் 50 படங்களுக்கும் மேல் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த மாதவனையே தனது நடிப்பினால் ஓரங்கட்டி விட்டார் மதி என்னும் கேரக்டரில் வரும் ரித்திகா சிங்.


அழுத்தமான காலடி

அழுத்தமான காலடி

வழக்கம் போல ஹீரோக்களுடன் டூயட் பாடுவது, மரத்தைச் சுற்றி வருவது மற்றும் 4 காட்சிகளில் நடித்துச் செல்வது போன்ற வழக்கமான ஹீரோயின் வகையில்லை. மாறாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு அறிமுக நடிகைக்கும் கிடைக்காத ஒரு அழுத்தமான வேடத்துடன் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்திருக்கிறார் ரித்திகா சிங். ரித்திகா சிங் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து நல்ல ஒரு நடிகையாக மாற வாழ்த்துக்கள்!அந்த ஒரு "குத்து"க்கே ரித்திகாவை ரசிகர்கள் ரொம்ப காலத்திற்குக் கொண்டாடுவார்கள் பாருங்கள்!

இந்த நேரத்தில் இறுதிச்சுற்று கதை மற்றும் அது கடந்து வந்த பாதை குறித்து இங்கே பார்க்கலாம்.

English summary
Irudhi Suttru: Ritika Singh is a most Successful Debut Heroine in Tamil Industry. in Real Life Ritika Singh is a Boxer and Has Participated Asian Indore Games in 2009.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil