»   »  'அலைபாயுதே' ஸ்டைலில் திருமணம் செய்த இலியானா?

'அலைபாயுதே' ஸ்டைலில் திருமணம் செய்த இலியானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இலியானாவுக்கும், அவரது ஆஸ்திரேலிய காதலர் ஆன்ட்ரூவுக்கும் கடந்த ஆண்டே ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு ராணி மாதிரி இருந்தவர் இலியானா. திடீர் என்று பாலிவுட் ஆசை வந்து மும்பைக்கு ஜாகையை மாற்றினார்.

Is Ileana already married?

அவர் நேரம் பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளார். அக்ஷய் குமார் ஜோடியாக அவர் நடித்த ருஸ்தம் படம் அண்மையில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

படத்தில் இலியானாவின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இலியானாவுக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவரது காதலரான புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு ஒரு சிலரை மட்டும் தான் அழைத்தார்களாம். அவர்களும் நாங்கள் இந்த திருமணம் பற்றி யாரிடமும் கூற மாட்டோம் என எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்களாம்.

English summary
Buzz is that Ileana got married to her photographer boyfriend Andrew Kneebone last december in Australia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X