கத்ரீன் கைஃப்க்கு ரகசிய நிச்சயதார்த்தமா...அதுவும் இவருடனா?

மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், கவர்ச்சி ராணியாகவும் இருப்பவர் கத்ரினா கைஃப். பல ஆண்டுகளாக அதிகம் காதல் கிசுகிசுக்களில் அடிபடுவதும் இவர் தான். சில ஆண்டுகள் முன்பு வரை சல்மான் கானுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின.

Is it true, Katrina kaif secretly engaged with vicky kaushal

அப்படி சமீப காலமாக கத்ரீனா கைஃப்பும், நடிகர் விக்கி கவுசலும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இன்றைய தேதியில் பிரபலமான பாலிவுட் காதல் ஜோடி என்றால் அது கத்ரினா - விக்கி ஜோடி தான். இவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பல காலமாக இவர்கள் தங்களின் உறவு பற்றி எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியமாக காத்து வருகின்றனர். இருந்தாலும் விழாக்கள் பலவற்றிற்கும் இவர்கள் ஒன்றாக வருவது தான் வழக்கம். இருந்தாலும் ஒன்றாக போஸ் கொடுப்பதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கத்ரினா மற்றும் விக்கிக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இரு ஸ்டார்களின் ரசிகர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்ததற்கான எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை.

இருந்தாலும் இந்த தகவல் உறுதியாவதற்குள் ரசிகர்களும், நெட்டிசன்களும் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அதே சமயம் ஸ்டார்களின் தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் வெளியிடப்படவில்லை.

ஆனால் இவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவது உண்மை தான். ஆனால் இவர்கள் இடையேயான உறவு மற்றும் நிச்சயதார்த்தம் பற்றி அந்த ஜோடி தான் கூற வேண்டும் என சொல்லி நழுவி விடுகிறார்கள்.

2003 ம் ஆண்டு பூம் படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த கத்ரினா பல பாலிவுட் படங்கள், விளம்பரங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யவன்சி, போன் பூத், டைகர் 3 உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதே போல் விக்கியும் சர்தார் உதம் சிங், சாம் பகதூர், தி கிரேட் இந்தியன் கிச்சன் இந்தி ரீமேக் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X