கணவரை பிரிந்து வாழ்கிறாரா சமந்தா....உண்மையாக தானா

ஐதராபாத் : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. ரசிகர்கள் மட்டுமல்ல மீடியாக்களாலும் அதிகமாக கவனிக்கப்படுபவரும் சமந்தா தான்.

படங்கள், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டு விஷயங்களிலும் கடந்த சில மாதங்களாகவே தலைப்பு செய்தியாக இருந்து வருகிறார் சமந்தா.

முதலில் இவர் நடித்த ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் சர்ச்சையாக பேசப்பட்டு, பரபரப்பானது. சமீபத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பினார்.

பெயரை மாற்றிய சமந்தா

பெயரை மாற்றிய சமந்தா

சமீப காலமாக சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்கள் தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. சமந்தா, நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணமத்திற்கு பிறகு சமந்தா பிரபு என்ற தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார்.

அக்கினேனி எங்கே போச்சு

அக்கினேனி எங்கே போச்சு

இந்நிலையில் சமீபத்தில் திடீரென பெயரின் பின்னால் இருந்த அக்கினேனி என்ற பெயரை நீக்கி, சமூக வலைதளங்களில் தனது டிஸ்பிளே பெயரை எஸ் என்று மட்டும் மாற்றினார். இதனால் சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்ய போகிறார் என செய்தி பரவியது.

பிரம்மாண்ட வீடு

பிரம்மாண்ட வீடு

அதே சமயம் இந்த பெயர் மாற்றம், தான் புதிதாக நடித்து வரும் சாகுந்தலம் படத்திற்காக தான் என சமந்தா தரப்பில் கூறப்பட்டது. அதோடு தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து கோவாவில் பண்ணை வீடு ஒன்றை சமந்தா வாங்கி உள்ளதாகவும், தனிமையில் இவர்கள் ஓய்வெடுப்பதற்காக மிக பிரம்மாண்டமாக அந்த பண்ணை வீடு அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

கணவரை பிரிந்து வாழ்கிறாரா

கணவரை பிரிந்து வாழ்கிறாரா

தற்போது மீண்டும் சமந்தா பற்றிய தகவல் தலைதூக்கி உள்ளது. அது என்னவென்றால், சமந்தா தற்போது ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறாராம். நாக சைதன்யா, தனது பெற்றோர்கள் இருக்கும் வீட்டிற்கே சென்று விட்டாராம். திருமணத்திற்கு பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் தனி வீட்டில் தான் வசித்து வந்துள்ளனர். இந்த வீட்டில் தான் தற்போது சமந்தா இருக்கிறாராம்.

மாமனார் நாகர்ஜுனா முயற்சி

மாமனார் நாகர்ஜுனா முயற்சி

இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக மாமனார் நாகர்ஜுனா பல முறை முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்து விட்டதாம். அதனால் தான் இந்த ஆண்டு தனது பிறந்த நாளைக் கூட மிக எளிமையாக கொண்டாடி விட்டாராம் நாகர்ஜுனா. வழக்கமாக குடும்பத்துடன் சேர்ந்து முக்கிய நாட்களை கொண்டாடும் இவர்கள், இந்த முறை சமந்தா ட்விட்டரில் வாழ்த்து கூறியதோடு நின்று விட்டார்.

பதிலளிக்க மறுக்கும் சமந்தா

பதிலளிக்க மறுக்கும் சமந்தா

ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க சமந்தா மறுத்து வருகிறார். மீடியாக்கள் மட்டுமல்ல உடன் நடிப்பவர்களும் சமந்தாவிடம் இது பற்றி கேட்டு வருகிறார்களாம். அதே சமயம் இந்த தகவல்கள் கொஞ்சம் கூட உண்மையில்லை, இந்த தம்பதி ஒன்றாக இணைந்து கோவாவில் மட்டுமல்ல மும்பையிலும் வீடு வாங்கி உள்ளதாக மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது.

சில மாதங்கள் பிரேக்

சில மாதங்கள் பிரேக்

இதற்கிடையில் சமீபத்தில் மற்றொரு தகவலும் வெளியானது. அதில், தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு புதிய படங்கள் எதிலும் சமந்தா ஒப்பந்தமாகவில்லையாம். இறுதிக் கட்டத்தில் இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்த பிறகு சில மாதங்கள் பிரேக் எடுத்துக் கொள்ள சமந்தா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரேக்கிற்கு என்ன காரணம்

பிரேக்கிற்கு என்ன காரணம்

இந்த பிரேக்கிற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த சில மாத பிரேக் கர்ப்பத்திற்காகவா அல்லது கணவருடனான பிரச்சனைக்காகவா என இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. கணவரை பிரிந்து வாழும் சமந்தா, விவாகரத்திற்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X