»   »  பேசாம "லீவு" விட்டுடலாமா.. சீரியஸ் யோசனையில் லட்சுமி மேனன்!

பேசாம "லீவு" விட்டுடலாமா.. சீரியஸ் யோசனையில் லட்சுமி மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து பாவாடை, தாவணிக் கதைகளாக வருவதால், சில காலம் தமிழ் சினிமாவிற்கு லீவு விட்டு விடலாமா என்ற முடிவில் இருக்கிறாராம் நடிகை லட்சுமி மேனன்.

கேரளத்தில் இருந்து கும்கி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து அவர் நடித்த சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா முதலிய வெற்றிப் படங்கள் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

பெயரைப் போலவே குடும்பப்பாங்கான நடிகையாக லட்சுமிகரமாக தொடர்ந்து நடித்ததால் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் இவர்.

கொம்பன்...

கொம்பன்...

விரைவில் கார்த்தி ஜோடியாக இவர் நடித்துள்ள கொம்பன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திலும் கிராமத்துப் பெண் வேடம் தான் லட்சுமிமேனனுக்கு.

மாடர்ன் டிரஸ் போட முடியவில்லையே...

மாடர்ன் டிரஸ் போட முடியவில்லையே...

குடும்பப் பாங்கான, வெற்றிப்பட நாயகி என்ற முத்திரையோடு உலா வரும் லட்சுமிமேனனுக்கு மனதில் ஒரு குறை உள்ளதாம். அது படங்களில் மாடர்ன் டிரஸ் போட முடியவில்லையே என்பது தான்.

வயதுக்கேற்ற உடை...

வயதுக்கேற்ற உடை...

பள்ளியில் படித்துக் கொண்டே, சென்னைக்கும் கேரளாவுக்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமிமேனன், தன் வயதுக்கேற்ற மாடர்ன் உடை அணிந்து நடிக்க முடியவில்லை என வருத்தப் படுகிறாராம்.

கிராமத்து நடிகை...

கிராமத்து நடிகை...

தொடர்ந்து புதிய வாய்ப்புகளுக்காக லட்சுமிமேனனை அணுகும் டைரக்டர்களும் கிராமத்துக் கதைகளோடு தான் வருகிறார்களாம். இதனால் தனக்கு கிராமத்து நடிகை என்ற முத்திரை விழுந்து விடுமோ என அஞ்சுகிறாராம் லட்சுமிமேனன்.

கவர்ச்சி காட்டும் ஆன்ட்டி நடிகைகள்..

கவர்ச்சி காட்டும் ஆன்ட்டி நடிகைகள்..

தன்னை விட வயதான ஆண்ட்டி நடிகைகள் எல்லாம் இன்னமும் மாடர்ன் மங்கைகளாக படங்களில் வளைய வந்து கொண்டிருக்க, பள்ளி மாணவியான தான் புடவை, தாவணியில் நடிப்பது போரடிக்கிறதாம் அவருக்கு.

பின்னணி பாடுவது...

பின்னணி பாடுவது...

இதனால் கொஞ்சநாளைக்கு தமிழ் சினிமாவிற்கு இடைவெளி கொடுக்கலாம் என நினைக்கிறாராம் லட்சுமிமேனன். இதற்கிடையே பின்னணி பாடுவதில் தனக்குள்ள திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளும் திட்டமும் உள்ளதாம்.

நல்லதற்கல்ல...

நல்லதற்கல்ல...

ஏற்கனவே, பருத்திவீரன் படத்தைத் தொடர்ந்து தனக்கு கிராமத்து பெண் வேடங்களாக வருகிறது என வருத்தப்பட்ட பிரியாமணி, பின்னர் தமிழ் சினிமாவில் இருந்தே காணாமல் போனார். தற்போது அந்த வரிசையில் லட்சுமிமேனனும் கிராமத்து படமா என புலம்ப ஆரம்பித்திருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லதில்லை என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

English summary
Lakshmi Menon is bored stiff of paavadai-dhavanis and village stories. She tells that she wants to take a break and do all the things teenagers do
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil