என்னது மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகிடுச்சா...அதை பார்த்து எப்படி கண்டுபிடிச்சிருக்காங்க பாருங்க
சென்னை : மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற குழப்பம் தான் சோஷியல் மீடியாவில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாளவிகாவில் லேட்டஸ்ட் ஃபோட்டோக்கள் சிலவும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். முதல் படமே ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இவரின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது.

அடுத்தடுத்த ஹிட் படங்கள்
இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக் பஸ்டர் படமாக அமைந்த மாஸ்டர், மாளவிகா மோகனனை டாப் ஹீரோயின் ஆக்கியது. இதனால் மூன்றாவது படமாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2022 ம் ஆண்டின் மத்தியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

திருமணமாகி விட்டதா
படங்கள் மட்டுமல்ல படுகவர்ச்சியாக ஃபோட்டோஷுட் நடத்தி இளம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். படங்கள், சோஷியல் மீடியா என பலவற்றிலும் பிசியாக இருந்து வருகிறார் மாளவிகா. அப்படி அவர் நடத்திய லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட் தான் அவருக்கு திருமணம் ஆகி விட்டதாக என பரபரப்பை கிளப்பி உள்ளது.

எப்படி கண்டுபிடித்திருக்கிறார்கள்
சமீபத்தில் லைட் க்ரீன் கலரில் வட இந்திய பெண் போல் பாரம்பரிய உடையணிந்து ஃபோட்டோஷுட் ஒன்றை நடத்தினார் மாளவிகா மோகனன். இதில் ஒரு ஃபோட்டோவில் மாளவிகா தனது இடது கால் விரலில் மெட்டி அணிந்திருப்பது போல் இருந்தது.

இதை கூட கவனித்துள்ளனர்
இந்து முறைப்படி, திருமணமான பெண்கள் மட்டுமே கால் விரலில் மெட்டி அணிவார்கள். இதை கவனித்து விட்ட நெட்டிசன்கள், மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகி விட்டது என விவாதம் நடத்த துவங்கினர். சிலர் நிஜமாகவே அவருக்கு திருமணம் ஆகி விட்டதா அல்லது ஃபோட்டோஷுட்டிற்காக இப்படி அணிந்திருக்கிறாரா என கேட்டு வருகின்றனர்.

மொத்தமாக மறக்க வச்சுட்டாரே
ஆனால் ரசிகர்களின் கவனத்தை முற்றிலுமாக மாற்றும் வண்ணம் அடுத்த ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டார் மாளவிகா. தகதகவென ஜொலிக்கும் புடவையில் படுகவர்ச்சியாக அவர் வெளியிட்ட ஃபோட்டோக்கள், ரசிகர்களை வாயடைத்து போக வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











