twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலுக்கு வருகிறார் பிரீத்தி ஜிந்தா

    By Mayura Akilan
    |

    மும்பை: நடிகை பிரீத்தி ஜிந்தாவிற்கு சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் என்ற ஆசை வந்துவிட்டது.

    விளம்பர மாடலாக இருந்து பாலிவுட் நடிகையாக உயர்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. இதன்பின்னர் ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராக மாறினார். இப்போது அரசியல் ஆசை துளிர்விட ஆரம்பித்துள்ளது.

    சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதனை உறுதிப்பட்டுத்தியுள்ளார். அவர் சொன்னதை படியுங்களேன்.

    நான் கவலைப்படுகிறேன்.

    நான் கவலைப்படுகிறேன்.

    நாட்டில் சமீப காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளன. எனவே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    மாற்றம் ஏற்பட முயற்சி

    மாற்றம் ஏற்பட முயற்சி

    நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நான் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன். இதனால் அரசியிலில் ஈடுபடுவது பற்றி சமீபகாலமாக யோசித்து வருகிறேன்.

    நேர்மையான அரசியல்வாதி

    நேர்மையான அரசியல்வாதி

    அரசியலில் ஈடுபட்டாலும் நேர்மையாகத்தான் இருப்பேன். நிச்சயம் ஊழலில் ஈடுபட மாட்டேன். ஒரு நாள் மக்களை சந்தித்து எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பேன்.

    ஊழலை ஒழிக்க வேண்டும்

    ஊழலை ஒழிக்க வேண்டும்

    ஊழல் ஒழிந்தால் இந்தியா பிரகாசிக்கும். ஊழலால்தான் ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது.

    கவர்ச்சிகரமான தோற்றம்

    கவர்ச்சிகரமான தோற்றம்

    அரசியலில் ஈடுபட்டால் கவர்ச்சிகரமான அரசியல்வாதியாக இருப்பேன். நல்ல ஆடைகளுடனும், நல்ல கூந்தலுடனும் காட்சி அளிப்பேன்.

    English summary
    Saddened by the current situation in the country, actress-businesswoman Preity Zinta is "thinking" about joining "politics" as she wants to be part of a movement to bring positive changes in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X