வடிவேலுவுக்கு ஜோடி பிரியா பவானிசங்கரா...எந்த படத்தில் தெரியுமா ?
சென்னை : செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை துவக்கிய பிரியா பவானிசங்கர், பிறகு சின்னத்திரை நடிகையானார். ஒரு சில சீரியல்களில் மட்டும் நடித்த பிரியாவிற்கு, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வந்து, தற்போது கோலிவுட்டின் பிஸியான நடிகையாகி விட்டார். தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்கள் பலரை தன் வசப்படுத்தி வைத்துள்ளார் பிரியா. மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பிரியா, தற்போத பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இத்தனை படங்களா
கமல் நடிக்கும் இந்தியன் 2, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஓ மணப் பெண்ணே, சிம்புவின் பத்து தல, தனுஷின் திருச்சிற்றம்பலம், ராகவா லாரன்ஸ் நடிக்கம் ருத்ரன், அசோக் செல்வன் நடிக்கும் ஹாஸ்டல் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானிசங்கர்.

வடிவேலு படத்தில் பிரியா
ஏற்கனவே பல படங்களில் நடித்து வரும் நிலையில், டைரக்டர் கல்யாண் இயக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி, விஷாலின் புதிய படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ள படத்திலும் பிரியா நடிக்கிறாராம்.

வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டைரக்டர் சுப்பராஜ் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரியா முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். ஆனால் காமெடி நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கவில்லையாம். அதே சமயம் படம் முழுவதும் அதிகமான சீன்களில் வரும் கேரக்டராம்.

வடிவேலுவின் ரீஎன்ட்ரி
இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் வடிவேலு. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளரான டைரக்டர் ஷங்கர், வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடும் அளவிற்கு போனார். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
Recommended Video

மீண்டும் பட வாய்ப்புகள்
சமீபத்தில் வடிவேலு, ஷங்கர் இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டதை அடுத்து வடிவேலுவுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. இதில் சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார் வடிவேலு. அப்படி அவர் நடிக்கும் ஒரு படத்தில் தான் பிரியா பவானிசங்கரும் நடிக்கிறாராம்.

வைரலான ஃபோட்டோ
இரண்டு நாட்களுக்கு முன் பிரியா பவானிசங்கரும், வடிவேலுவும் இணைந்து நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவி வைரலாகின. இதனால் வடிவேலுவுக்கு ஜோடியாக பிரியா நடிக்க உள்ளதாக செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் விசாரித்த போது தான் வடிவேலு படத்தில் பிரியா நடிப்பதும், ஜோடி இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











