»   »  கட்டுனா தெலுங்கு பையனை கட்டுவேன்னு ரகுல் ப்ரீத் சொன்னது ராணாவை தானா?

கட்டுனா தெலுங்கு பையனை கட்டுவேன்னு ரகுல் ப்ரீத் சொன்னது ராணாவை தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரானாவுடனான காதலை குறித்து தானே விளக்கம் அளித்த ராகுல் பரீத் சிங்

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக வெளியான தகவல்கள் குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் ராணாவும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஒரு நடிகையின் பெயரோடு சேர்த்து ராணாவின் பெயர் அடிபடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

இந்நிலையில் இது குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது,

ஹைதராபாத்

ஹைதராபாத்

நான் என் குடும்பத்தாரை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் தங்கி படங்களில் நடித்து வருகிறேன். 15 முதல் 20 பேர் அடங்கிய நண்பர்கள் கேங் உள்ளது. அந்த கேங்கில் ராணாவும் ஒருவர்.

அடிக்கடி

அடிக்கடி

நானும், ராணாவும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வோம். நாங்கள் அருகருகே வசிக்கிறோம். எங்களின் கேங்கில் 2, 3 பேர் தான் சிங்கிள். அதில் நானும், ராணாவும் அடக்கம்.

சிரிப்பு

சிரிப்பு

நாங்கள் காதலிப்பதாக வெளியாகும் செய்திகளை படித்து நானும், ராணாவும் வாய்விட்டு சிரிப்போம். நாங்கள் காதலர்கள் இல்லை. இது வெறும் வதந்தி. நான் யாரையாவது காதலித்தால் மறைக்க மாட்டேன், அனைவரிடமும் கூறுவேன்.

நண்பர்கள்

நண்பர்கள்

யாராவது ஒரு நல்ல பையனா பார்த்து சொல்லுங்கப்பா என்று என் நண்பர்களிடம் அடிக்கடி கூறுவேன். எனக்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என் நண்பர்கள்.

திருமணம்

திருமணம்

தற்போதைக்கு என் வேலை தான் எனக்கு முக்கியம். சினிமா துறையை சேர்ந்த யாரையாவது டேட் செய்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அவர்களுக்கு என் வேலை பற்றி நன்கு புரியும். ஆனால் யார் மீது காதல் வரும் என்று சொல்ல முடியாதே என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

சினிமா

சினிமா

தெலுங்கு பையனை திருமணம் செய்து கொள்வேன். சமந்தா போன்று நானும் திரைத்துறையை சேர்ந்த குடும்பத்தில் மருமகள் ஆகலாம் என்று ரகுல் ப்ரீத் சிங் பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையில் தான் அவரின் பெயர் ராணாவுடன் சேர்ந்து அடிபடுகிறது.

English summary
Actress Rakul Preet Singh said that she is not dating actor Rana. Rana is a good friend friend of mine and a part of my friends gang, she added. Rakul Preet Singh hangs out with Rana frequently as he is part of her friends circle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil