»   »  ஷெரீன்-ஸ்ரீசந்த் காதலா?!

ஷெரீன்-ஸ்ரீசந்த் காதலா?!

Subscribe to Oneindia Tamil
 Sherin
நடிகை ஷெரீனுக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்துக்கும் இடையே காதல் என்று ஒரு கிசுகிசு பரவிக் கொண்டிருந்தாலும் அதை திட்டவட்டமாக மறுக்கிறார் ஷெரீன்.

துள்ளுவதோ இளமையோடு திரும்பி பெங்களூருக்கே போனவர் நீண்ட காலத்துப் பின்னர் தெலுங்கு வழியாக விசில் படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால், சரி வர வாய்ப்புகள் அமையாததால் கன்னடத்தில் டயத்தை பாஸ் செய்து கொண்டிருந்தார். அப்படியே மலையாளத்திலும் தலை காட்டினார்.

மலையாளத்தில் இவர் நடித்த நரேந்திரன் படம் நன்றாக ஓடிக் ெகாண்டுள்ள நிலையில் தான் கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீசந்துக்கும் ஷெரீனுக்கும் இடையே பற்றிக் கொண்டுவிட்டதாக தகவல் கசிந்தது.

இது குறித்து ஷெரீனிடமே கேட்டால், நான் ஒரே ஒருவரைத் தான் காதலிக்கிறேன்.. அது என்னைத் தான்.

மற்றபடி நானும் ஸ்ரீசந்தும் நல்ல நண்பர்கள். ஆனால், எங்களுக்குள் காதலும் இல்லை.. கத்திரிக்காயும் இல்லை என்கிறார்.

ஏற்கனவே காதலில் மாட்டித்தான் தான் தாயாரைப் பிரிந்து சினிமா வாய்ப்புகளையும் இழந்தார் ஷெரீன் என்பது நினைவில் இருக்கிறது தானே.

இப்போது நந்தாவுடன் நடித்த உற்சாகம் படத்தைத் தொடர்ந்து தமிழில் ஷெரீனின் மார்க்கெட் நன்றாகவே சூடு பிடித்திருக்கிறதாம். எஸ்ஜே சூர்யாவுடன் வில், ஜனநாதனின் இயக்கத்தில் பேராண்மை, தெலுங்கில் 3 படங்கள் என சந்தோஷத்தில் மிதக்கிறார்.

நிறைய படங்கள் வர ஆரம்பித்துவிட்டதால் சென்னையில் ஒரு வீட்டையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார். இப்போது ஹோட்டலில் வாசம் செய்து கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil