என்னது...வனிதாவின் 3வது கணவர் பவர் ஸ்டாரா...என்னப்பா சொல்றீங்க
சென்னை : சமீப காலமாக மீரா மிதுனுக்கு பிறகு அதிக அளவில் சர்ச்சைகளில் சிக்கி கொண்ட நடிகை என்றால் அது வனிதா விஜயக்குமார் தான். அதிலும் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு வனிதா பற்றிய ஏதாவது ஒரு பரபரப்பான செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி.,யில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் பாதியிலேயே அந்த படத்தில் இருந்து வெளியேறி, பரபரப்பை கிளப்பினார். இதற்காக வனிதா விளக்கமும் கொடுத்து விட்டார்.

பரபரப்பை கூட்டும் வனிதா
அதற்கு பிறகு பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் மாலை மாற்றிக் கொண்ட ஃபோட்டோ, கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி, மகள் பிறந்தநாளில் வாயோடு வாய் வைத்து கேக் ஊட்டி விட்ட ஃபோட்டோ போன்றவை வனிதா பற்றிய பரபரப்புக்களை கொஞ்சமும் குறைய விடாமல் வைத்துக் கொண்டுள்ளது.

தெறிக்க விட்ட பதில்
பவர்ஸ்டாருடன் மாலை மாற்றிக் கொண்ட ஃபோட்டோ பற்றிய பிரஸ்மீட்டில் கேட்ட போதும், 4 என்ன 40 திருமணம் கூட செய்வேன். அது என் இஷ்டம் என கூறி பத்திரிக்கையாளர்களை தெறிக்க விட்டார் வனிதா. இதுவும் சர்ச்சையானது.

இதுக்கு தான் ஃபோட்டோவா
தற்போது வனிதா விஜயக்குமார் பிரஷாந்த் நடிக்கும் அந்தகன், பவர்ஸ்டார் சீனிவாசனுடன் பிக்அப் டிராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் பவர்ஸ்டார் சீனிவாசன் லீட் ரோலில் நடிக்கும் பிக்அப் டிராப் படத்தின் ஃபோட்டோஷுட்டிற்காக தான் பவர்ஸ்டாருடன் மாலை மாற்றிக் கொண்ட ஃபோட்டோக்களை வனிதா வெளியிட்டது பிறகு தான் தெரிய வந்தது.

இவர் தான் டைரக்டரா
இந்த படத்தை பவர்ஸ்டார் தான் இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை, நேற்று நடைபெற்றது. அது தொடர்பான ஃபோட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியானது. சேலம் ஆர்ஆர் பிரியாணிஸ் உரிமையாளர் தமிழ்செல்வன், ஜிபி மத்து, செந்தில், ரோஷன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

வனிதாவின் 3வது கணவரா
இந்த படத்தை இயக்கி, நடிப்பது மட்டுமல்ல இதற்கு பவர்ஸ்டார் தான் இசையமைக்கிறாராம். இந்த படத்தில் வைரல் ஸ்டார் என்ற டைட்டிலுடன் வனிதா அறிமுகப்படுத்தப்பட உள்ளாராம். படத்தின் கதைப்படி, வனிதா, பவர்ஸ்டாரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் பேய் பங்களாவில் வசிக்கிறார்கள். இந்த தம்பதி எப்படி பேய்களை சமாளித்து, அந்த திகில் சூழலில் இருந்து மீண்டு வருகிறார்கள் என்பது தான் படத்தின் கதையாம்.

இதுக்கு தானா அது
இந்த படத்திற்காக தான் கழுத்தில் தாலி, மாலை மாற்றிக் கொண்டது போன்று எல்லாம் போஸ் கொடுத்துள்ளாராம் வனிதா. படத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே வனிதாவால் பெரிய அளவில் விளம்பரத்தை பெற்று விட்டது பிக்அப் டிராப் படம்.


Click it and Unblock the Notifications











