»   »  என்னது, தீபிகாவுடைய இந்த போட்டோ தான் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட போட்டோவா?

என்னது, தீபிகாவுடைய இந்த போட்டோ தான் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட போட்டோவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹாலிவுட் நடிகர் வின்டீசலும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தான் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட ஒரு இந்திய பிரபலத்தின் புகைப்படமாம்.

பாலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் தீபிகா படுகோனே ஹாலிவுட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஹாலிவுட் நடிகர் வின்டீசலுடன் தேர்ந்து XXX: தி ரிட்டர்ன் ஆர் சான்டர் கேஜ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் வின்டீசலும், தீபிகாவும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தீபிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து தீபிகாவின் ரசிகர் மன்றம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தீபிகா மற்றும் வின்டீசல் இருக்கும் இந்த புகைப்படம் தான் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்திய பிரபலங்களின் புகைப்படங்களில் ஒன்று. ஒரு இந்திய பிரபலத்தின் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Buzz is that photo of Deepika Padukone with Hollywood actor Vin Diesel is the most liked picture of an Indian celebrity on Instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil