»   »  த்ரிஷா இருக்காரா இல்லையா? சஸ்பென்ஸ் வைக்கும் ஹரி!

த்ரிஷா இருக்காரா இல்லையா? சஸ்பென்ஸ் வைக்கும் ஹரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரும் வராம் ரிலீசாகவிருக்கிறது ஹரி இயக்கியிருக்கும் சிங்கம் 3. அடுத்து அவர் விக்ரமை வைத்து சாமி 2 இயக்கப்போவதாக சொல்லியிருந்தார். இப்போது கவுதம்மேனனின் துருவ நட்சத்திரத்தில் பிசியாக இருக்கும் விக்ரம் சில வாரங்களில் விக்ரமுடன் இணைவார் என்கிறார்கள்.

Is Trisha in Saami sequel?

ஹீரோ ரெடி, புரடக்‌ஷன் ரெடி, இயக்குநரும் ரெடி. ஆனால் ஹீரோயின் விஷயத்தில் தான் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. சாமி முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா இரண்டாம் பாகத்தில் இருப்பாரா இல்லையா என்பது தான் இன்னும் நீடிக்கும் சஸ்பென்ஸ். சிங்கத்தின் இரண்டாம், மூன்றாம் பாகத்தில் அனுஷ்காவை பயன்படுத்தியது போல த்ரிஷாவை இதில் சில காட்சிகளுக்கும், இன்னொரு இளம் ஹீரோயினையும் சேர்க்கலாம் என திட்டமிட்டிருந்தார் ஹரி. ஆனால் த்ரிஷா பீட்டா பிரச்னையில் சிக்கியதால் அனாவசிய சர்ச்சைகள் எழும் என்பதால் த்ரிஷாவை படத்தில் சேர்க்க இப்போது யோசிக்கிறார்களாம்.

இதைக் காரணம் காட்டியே கூட த்ரிஷா கழட்டி விடப்படலாம். இதுவே வேறு படங்களிலும் தொடரலாம்!

English summary
Is actress Trisha is in Hari's Saami sequel? The suspense is continuing due to Trisha's role in PeTA.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil