Just In
- 10 min ago
'பழைய ஃபார்முக்கு வர்றேன்..' தீவிர பயிற்சியில் நடிகை தமன்னா.. வேகமாகப் பரவும் ஒர்க் அவுட் வீடியோ!
- 1 hr ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 2 hrs ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
Don't Miss!
- Automobiles
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்!
- News
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்
- Sports
இதுவரைக்கும் இல்லாதவகையில அதிகமாக பார்க்கப்பட்ட போட்டி... 54% அதிக பார்வையாளர்கள்
- Education
ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
- Lifestyle
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'அவர் ஜீனியஸ், நம் சினிமாவுக்கு அவர் பங்களிப்பே வேற' சர்ச்சை இயக்குனரை சரமாரியாக பாராட்டும் ஹீரோயின்
மும்பை: அந்த பிரபல சர்ச்சை இயக்குனரை, நடிகை இஷா கோபிகர் சரமாரியாகப் பாராட்டியுள்ளார்.
பிரபல இந்திப் பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஏராளமான தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கியுள்ள பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரா என்ற இந்தி படத்தை எடுத்தார்.

உண்மை சம்பவங்கள்
இந்த படம் தமிழிலும் வெளியானது. ஆனால், பெரிய வரவேற்பை பெறவில்லை. தமிழில் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா, வின்சென்ட் செல்வா இயக்கிய ஜித்தன் ஆகிய படங்களின் கதை, இவர் எழுதியதுதான். பல்வேறு உண்மை சம்பவங்களை படமாக்கி வரும் இவர் அடுத்து, ஐதராபாத்தில் நடந்த திஷா பாலியல் வன்கொடுமை விவகாரத்தை படமாக்க இருக்கிறார்.

இஷா கோபிகர்
இதுபற்றி அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ராம்கோபால் வர்மாவின் வெப் சீரிஸில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார், நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில், காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே படங்களில் நடித்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

நான்கு இயக்குனர்கள்
இஷா கோபிகர், ஏற்கனவே ராம்கோபால் வர்மாவின் இந்தி படமான 'கம்பெனி'யில் நடித்திருந்தார். கேங்ஸ்டர் படங்களுக்கு உதாரணமாக அந்தப் படம் இன்றும் இருக்கிறது. வெப்சீரிஸில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, அதில் நான் நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டது. இந்த தொடரை நான்கு இயக்குனர்கள் இயக்குகிறார்கள். ராம்கோபால் வர்மா தொகுத்து வழங்குவார்.

அவர் ஜீனியஸ்
மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு, அதை வர்மாவிடம் கொடுத்துவிட வேண்டும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை அவர் கவனித்துக் கொள்வார் என்கிற இஷா கோபிகர், ராம் கோபால் வர்மாவை புகழ்ந்துள்ளார். அவர் ஒரு ஜீனியஸ். இந்திய சினிமாவுக்கு சில கல்ட் திரைப்படங்களை தந்திருக்கிறார். நான் பார்த்த முதல் இந்தி ஹாரார் படம், ராத். அவர் இயக்கியது. அடுத்து, பூட், ரங்கீலா, சத்யா உட்பட பலவித ஜானர்களில் அவர் படம் இயக்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.