»   »  என்ன நடிப்பு, என்ன நடிப்பு: தனுஷுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யா

என்ன நடிப்பு, என்ன நடிப்பு: தனுஷுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வீரா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனனுக்கு தனுஷுடன் நடிக்க ஆசையாக உள்ளதாம்.

கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். அவர் ராஜாராமன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகுகிறார்.

நடிப்பு குறித்து ஐஸ்வர்யா கூறுகையில்,

ரோல் மாடல்

ரோல் மாடல்

தமிழ் சினிமாவில் எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். நான் பொறுமையாக இருந்து கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. சினிமாவில் சாதிக்க விடா முயற்சி தேவை.

தனுஷ்

தனுஷ்

எனக்கு தனுஷுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் திரையில் அவரது அபார நடிப்பை பார்த்து வியக்கின்றேன். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

வீரா

வீரா

வீரா படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளேன். எனக்கு தற்போதே சில தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன. அது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அரிது

அரிது

வீரா படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம். இது போன்ற கதாபாத்திரம் கிடைப்பதே அரிது. கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொண்டு நடித்துள்ளேன்.

English summary
Actress Iswarya Menon, who is making her debut as a lead with upcoming Tamil actioner 'Veera', says it's on her wish list to work with Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil