»   »  எல்லாம் வயித்தெரிச்சல் செய்யும் வேலை: பொங்கும் கீர்த்தி சுரேஷ் தரப்பு

எல்லாம் வயித்தெரிச்சல் செய்யும் வேலை: பொங்கும் கீர்த்தி சுரேஷ் தரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு திரையுலகில் தனது வளர்ச்சியை பிடிக்காத யாரோ தன்னை பற்றி வதந்தி பரப்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள பைரவா படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது.

தனக்கு மவுசு அதிகரித்துள்ளதை உணர்ந்து கீர்த்தி தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.

தெலுங்கு

தெலுங்கு

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. முன்பு எல்லாம் படப்பிடிப்புக்கு ஒழுங்காக சென்ற அவர் தற்போது மக்கர் செய்வதாக தகவல் வெளியானது.

பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி. பவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகே அவர் நானியின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை என்று கூறப்படுகிறது.

கேரவன்

கேரவன்

படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறாராம். வந்தாலும் கேரவனுக்குள் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்து கொள்கிறார் கீர்த்தி என்று தெலுங்கு திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.

வதந்தி

வதந்தி

கீர்த்தி பற்றி தெலுங்கு திரையுலகில் பேசப்படுவது குறித்து அவர் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமையில் உள்ளவர்கள் வயித்தெரிச்சலில் பரப்பும் வதந்தி இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to sources close to Keerthy Suresh, people who are jealous of her growth are spreading rumours about her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil