»   »  நடிகரை மட்டும் காதலிக்கவே கூடாதுடா சாமி: சொல்வது நடிகை கங்கனா

நடிகரை மட்டும் காதலிக்கவே கூடாதுடா சாமி: சொல்வது நடிகை கங்கனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகரை காதலிக்கவே கூடாது. அது நல்லது அல்ல என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் இன்றைய தேதிக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரனாவத். ஒரு படத்திற்கு அம்மணி ரூ.11 கோடி வாங்குகிறாராம். ஏங்க, ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளமா என்று கேட்டால், நன்றாக நடிக்க வேண்டும் என்று அதிக டேட்ஸ் கொடுக்கிறேன், அதற்கேற்ற சம்பளத்தை வாங்குகிறேன் என்கிறார்.

இந்நிலையில் கங்கனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

சிங்கிள்

சிங்கிள்

நான் யாரையும் காதலிக்கவில்லை. சிங்கிளாகத் தான் உள்ளேன். நடிகரை காதலிப்பது கடினம் என்று நினைத்தேன். அது ஆரோக்கியமானதும் அல்ல.

போட்டி

போட்டி

காதலர் என்றால் நமக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் நடிகரை காதலித்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டியவரே நம்மை தொழில் ரீதியாக போட்டியாக நினைப்பார். அதனால் நடிகரை காதலிக்காமல் இருப்பதே நல்லது.

காதலி

காதலி

நான் ஒரு மோசமான காதலி என்று தெரிவித்துள்ளார்கள். நான் ஒரு நல்ல காதலரை தேடுகிறேன். தற்போது நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை என்றார் கங்கனா.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

மனைவியை பிரிந்து வாழும் ரித்திக் ரோஷனும், கங்கனாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. இது குறித்து ரித்திக்கிடம் கேட்டதற்கு, ஓ மை காட் என்று பதில் அளித்தார்.

English summary
Bollywood's highest paid actress Kangana Ranaut said that it is best not to date an actor.
Please Wait while comments are loading...