»   »  நயன்தாரா இல்லை ஸ்ருதி தான் 'தல' ஹீரோயின்

நயன்தாரா இல்லை ஸ்ருதி தான் 'தல' ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 56 படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் தான் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 56 படத்தில் நடிக்க உள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி படம் பூஜையுடன் துவங்குகிறது. படத்திற்கு அச்சமில்லை என்ற தலைப்பை சிவா தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

அஜீத்துக்கு ஜோடி யார் என்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

சமந்தா

சமந்தா

தல 56 படத்தில் அஜீத் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார் என்று துவக்கத்தில் கூறப்பட்டது. பின்னர் அந்த பேச்சு அடங்கிவிட்டது.

ஹன்சிகா

ஹன்சிகா

அஜீத்தின் அடுத்த படத்தின் நாயகி ஹன்சிகா தான் என்று சில நாட்கள் பேசப்பட்டது.

ஸ்ருதி

ஸ்ருதி

புலி படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் ஸ்ருதி ஹாஸன் தான் அஜீத்தின் ஹீரோயின் என்று செய்திகள் வெளியாகின.

பிந்து மாதவி

பிந்து மாதவி

தல 56 படத்தில் அஜீத்துக்கு இரண்டு ஜோடி. அதனால் பிந்து மாதவியும், ஸ்ருதி ஹாஸனும் ஹீரோயின்களாக நடிக்க உள்ளனர் என்று கூறப்பட்டது.

நயன்தாரா

நயன்தாரா

இல்லை இல்லை பிந்து மாதவியோ, ஸ்ருதியோ அஜீத்துடன் நடிக்கவில்லை நயன்தாரா தான் நடிக்கப் போகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

மீண்டும் ஸ்ருதி

மீண்டும் ஸ்ருதி

நயன்தாரா இல்லை ஸ்ருதி தான் தல 56 படத்தின் ஹீரோயின் என்பது முடிவாகிவிட்டதாம். இது குறித்து ஸ்ருதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்தாகிவிட்டது. இந்த செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
It is not Nayanthara but Shruti Haasan who is going to act with Ajith in Thala 56.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil