ஹன்சிகாவுக்கு விரைவில் டும் டும் டும்… அரண்மனையில் திருமணம்… மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா?

சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவின் கைவசம் ஒருசில படங்கள் மட்டுமே உள்ளன.

ஹன்சிகாவின் நடிப்பில் கடைசியாக 'மஹா' திரைப்படம் வெளியாகியிருந்தது, இதில், சிம்புவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஹன்சிகாவுக்கு அவரது காதலருடன் விரைவில் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் டூ கோலிவுட்

பாலிவுட் டூ கோலிவுட்

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, அதன்பிறகு நாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் 2011ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்கள் மூலம் அடியெடுத்து வைத்த ஹன்சிகா, முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் நடிகையாக ஒருரவுண்டு வந்தார். விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் என பலருடனும் ஜோடிப் போட்ட ஹன்சிகாவுக்கு இப்போது ரியல் ஜோடி கிடைத்துவிட்டதாம். அட ஆமாங்க, விரைவில் ஹன்சிகாவுக்கும் அவரது காதலருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசினஸ் பார்ட்னருடன் காதல்

பிசினஸ் பார்ட்னருடன் காதல்

ஹன்சிகா ஒருபக்கம் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், இன்னொரு சைடில் சொந்தமாக பிஸினஸ் செய்துவந்தார். 2020ம் ஆண்டு ஹன்சிகா தொடங்கிய ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பிசினஸில் அவரது பார்ட்னராக சோஹைல் கதுரியா என்பவரும் இணைந்தார். இருவரும் சேர்ந்து நடத்தி வரும் இந்த ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பிசினஸ் ரொம்பவே சக்ஸஸ்ஃபுல்லாக நடைபெற்று வருகிறதாம். இதனால், ஹன்சிகாவும் சோஹைல் கதுரியாவும் ரியல் லைஃப்பிலும் பார்ட்னராக முடிவெடுத்துவிட்டார்களாம். அதன்படி, இவர்களது திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரண்மனையில் திருமணம்

அரண்மனையில் திருமணம்

ஹன்சிகாவின் திருமண விழா ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாம். அதற்காக அரண்மனையில் ஏராளமான அறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறதாம். மேலும், பழங்கால பாரம்பரிய முறைப்படி ஹன்சிகாவின் திருமணம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் திருமண தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

சிம்புவுடன் காதல்?

சிம்புவுடன் காதல்?

சில வருடங்களுக்கு முன்னர் ஹன்சிகாவுக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையே காதல் என சொல்லப்பட்டு வந்தன. அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதன் பின்னர் சமீபத்தில் வெளியான 'மஹா' படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா, அவரது காதலரையே கரம் பிடிக்கவுள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X