»   »  அனுஷ்காவுக்கு திருமணம்: ஆனால் மாப்பிள்ளை அவர் இல்லை...

அனுஷ்காவுக்கு திருமணம்: ஆனால் மாப்பிள்ளை அவர் இல்லை...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஷ்காவுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நடக்க உள்ளதாம்.

சூப்பர் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் அனுஷ்கா. அருந்ததி படம் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது பாகுபலி 2 படத்தில் பிசியாக உள்ளார். இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள், எஸ் 3 படத்திலும் பிசியாக உள்ளார்.

அடுத்த மாதம் அவருக்கு 35 வயது ஆக உள்ளது. இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தயாராகிவிட்டனர்.

திருமணம்

திருமணம்

அனுஷ்காவின் பெற்றோர் ஊர், ஊராக மாப்பிள்ளை பார்த்து இறுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை தேர்வு செய்துள்ளார்களாம். அனுஷ்காவுக்கும், அவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

பாகுபலி 2

பாகுபலி 2

ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா பாகுபலி 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாகுபலி ரிலீஸான பிறகு திருமணம் செய்து கொள்ள வசதியாக அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பாகுபலி 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

அனுஷ்காவுக்கும், ஏற்கனவே திருமணமான தெலுங்கு பட தயாரிப்பாளருக்கும் இடையே காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கடந்த மாதம் டோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

சமந்தா

டோலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவுக்கும், சமந்தாவுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளது. இதில் யாருக்கு முதலில் திருமணம் என்பது தெரியவில்லை.

English summary
It is told that Anushka is all set to marry a Hyderabad based businessman next year after her Baahubali 2 release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil