»   »  முதலில் தெரியலை, ஆனால் போகப் போக ரொம்ப வலித்தது: கீர்த்தி சுரேஷ் வேதனை

முதலில் தெரியலை, ஆனால் போகப் போக ரொம்ப வலித்தது: கீர்த்தி சுரேஷ் வேதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
கொண்டை போட்டு வந்த கீர்த்தி சுரேஷ், மரண கலாய் கலாய்த்த ரசிகர்கள்- வீடியோ

சென்னை: ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு கொண்டை போட்டு வந்த தன்னை மக்கள் கலாய்த்தது வலித்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படமான அஞ்ஞாதவாசியின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. விழாவுக்கு கீர்த்தி சுரேஷ் வித்தியாசமாக வந்ததை பார்த்த மக்கள் அவரை கலாய்த்தனர்.

இது குறித்தும், தனது படங்கள் குறித்தும் கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது,

சம்பளம்

சம்பளம்

நான் சாமி 2 படத்திற்கு ஓவராக சம்பளம் கேட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. நான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை தான் இந்த படத்திற்கும் கேட்டேன்.

சாமி 2

சாமி 2

த்ரிஷா ஏன் சாமி 2 படத்தில் இருந்து வெளியேறினார் என்று எனக்கு தெரியாது. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். ஹரி என்னை அணுகியபோது சாமி 2 படத்தில் த்ரிஷா இருக்கிறாரா என்று தான் முதலில் கேட்டேன். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.

விஷால்

விஷால்

சண்டக்கோழி 2 கதையை கேட்டதுமே பிடித்துவிட்டது. உடனே அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் தேசிய விருது பெற்ற மீரா ஜாஸ்மின் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய விஷயம்.

கொண்டை

கொண்டை

ஹைதராபாத் நிகழ்ச்சிக்கு புதிய லுக்கில் வரலாம் என்று சேலை கட்டி கொண்டை போட்டு வந்தேன். ஆனால் மக்கள் என்னை கலாய்க்க ஆரம்பித்தனர். முதலில் நான் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் போகப் போக ரொம்ப வலித்தது என்றார் கீர்த்தி சுரேஷ்.

English summary
Actress Keerthy Suresh said that she tried new look for Pawan Kalyan starrer Agnyaathavaasi audio launch but people started criticising her for the same. Initially she didn't take it seriously but later it started hurting her a lot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X