»   »  அவருடன் நடிக்கும் கௌரவம் கிடைக்குமா?: எதிர்பார்த்து காத்திருக்கும் ஸ்ருதி ஹாஸன்

அவருடன் நடிக்கும் கௌரவம் கிடைக்குமா?: எதிர்பார்த்து காத்திருக்கும் ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிப்பது கௌரவமானது. அந்த வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளேன் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இந்தி படமான லக் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாஸன். தந்தை கமல் ஹாஸன் உதவியின்றி தன் சொந்த காலில் நிற்க விரும்புபவர். டோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக உள்ள ஸ்ருதி பாலிவுட், கோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி சினிமா பற்றியும் அப்பா பற்றியும் கூறுகையில்,

கௌரவம்

கௌரவம்

அப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிப்பது என்பதே கௌரவமான விஷயம். நாங்கள் இருவரும் இன்னும் சேர்ந்து நடிக்கவில்லை. எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என நம்புகிறேன்.

யாரா

யாரா

நான் இந்தியில் திக்மான்ஷு துலியாவின் இயக்கத்தில் யாரா படத்தில் நடித்து முடித்துள்ளேன். நடிக்க வந்து இவ்வளவு சீக்கிரம் திக்மான்ஷுவின் இயக்கத்தில் நடித்துள்ளதை நினைக்கையில் நான் நிச்சயம் அதிர்ஷ்டசாலி தான்.

வருத்தம்

வருத்தம்

யாரா படத்தில் நடித்தை மறக்கவே முடியாது. திக்மான்ஷு எனக்கு அருமையான கதாபாத்திரத்தை அளித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது என்றார் ஸ்ருதி.

கமல்

கமல்

முன்னதாக கமல் ஹாஸன் ஒரு படத்தில் நடிக்குமாறு ஸ்ருதியை கேட்க அவரோ அப்பா நான் ரொம்ப பிஸி பின்னர் பார்க்கலாம் என்று கூறியதாக போச்சாகக் கிடந்தது. இந்நிலையில் தான் அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறார் ஸ்ருதி.

English summary
Shruti Haasan told that it would be an honour to work with father Kamal Haasan.
Please Wait while comments are loading...