»   »  குத்துப்பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போடுவது பேஷனாகிப் போச்சுங்க.. அஞ்சலி

குத்துப்பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போடுவது பேஷனாகிப் போச்சுங்க.. அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் ஐட்டம் பாடல்களுக்கு கதாநாயகிகள் ஆடுவது தற்போது பேஷனாகி விட்டது என்கிறார் நடிகை அஞ்சலி. இதனால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக இழுத்து போர்த்தி நடித்த நடிகைகள் பலரும் கவர்ச்சிக்கு மாறி வருகின்றனர். வாய்ப்பு கிடைக்காத முன்னணி நாயகிகள் பலரும் குத்துப் பாட்டுக்கு வந்து விடுகிறார்கள்.

தற்போது கவர்ச்சி இருந்தால்தான் ரசிகர்களும் விரும்பி படத்தை பார்க்கின்றனர். அந்த வகையில் பிஸியாக நடிக்கும் முன்னணி நாயகிகளும் நல்ல டப்பும், வாய்ப்பும் கிடைத்தால் ஒரு குத்து குத்தி விடுகிறார்கள்.

முன்னணி குத்து

முன்னணி குத்து

முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைத்தால் சரி என்ற நிலையில் இருக்கின்றனர் பல நாயகிகள். எனவேதான் வருகிற வாய்ப்பை விடாமல் வளைத்து போடுகின்றனர்.

சிங்கத்தில் அஞ்சலி

சிங்கத்தில் அஞ்சலி

அந்த வரிசையில் அமைதியாக நடித்த அஞ்சலி கொஞ்ச நாள் காணமல் போய் மீண்டும் திரும்பி வந்து 'சிங்கம் 2' படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டார். தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் 'சரைனொடு' படத்திலும் அஞ்சலியின் குத்தாட்டம் இடம்பெறுவதாக சொல்லப்படுகிறது.

அக்கறையாக கேட்டால்

அக்கறையாக கேட்டால்

இது சரியா? என்று அஞ்சலி மேல் அக்கறை கொண்டவர்கள் கேட்கிறார்களாம். கதாநாயகியாக நடிக்கும்போது ஐட்டம் பாடலுக்கு ஆடினால் நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்குமே'' என்றார்களாம்.

ஸ்ருதி கூடத்தான் ஆடுகிறார்

ஸ்ருதி கூடத்தான் ஆடுகிறார்

அதற்கு, அஞ்சலியோ நான் மட்டுமா ஆடுகிறேன் ''ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட எத்தனையோ பிரபல நடிகைகள் ஒரு பாட்டுக்கு மட்டும் அடித்தானே வருகின்றனர். சினிமாவில் இப்போது ஓரு பாடலுக்கு ஆடுவது ஒரு பேஷனாகி விட்டது என்கிறாராம்.

ஒரு பாதிப்பும் வராது

ஒரு பாதிப்பும் வராது

நான் கவர்ச்சியாக ஆடுவதால் என்னுடைய மற்ற படங்களுக்கும் வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது என்கிறார் அஞ்சலி. காற்றுள்ளபோதே தூற்றிக்கணும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் அஞ்சலி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

English summary
Actress Anjali has said that there is no wrong in dancing in items songs.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil