»   »  '5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

'5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க 5 கோடி சம்பளம் கேட்டு, படக்குழுவை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் 'மர்டர் 2', 'ஹவுஸ்புல் 2', 'கிக்', 'பிரதர்ஸ்' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

Jacqueline Fernandez asks 5 Crore Salary

ஜாக்குலின் நடித்து சமீபத்தில் வெளியான 'ஹவுஸ்புல் 3' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 'டிஷூம்', 'எ பிளையிங் ஜாட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Jacqueline Fernandez asks 5 Crore Salary

இந்நிலையில் சிரஞ்சீவியின் 150 வது படமாக உருவாகும் 'கத்திலண்டோடு' (கத்தி ரீமேக்) படத்தில் ஜாக்குலினை, சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க படக்குழு முயற்சித்துள்ளது.

Jacqueline Fernandez asks 5 Crore Salary

இதற்காக பேச்சுவார்த்தை நடத்த சென்றவர்களிடம் 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு அவர்களை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஜாக்குலின் ஆர்வம் காட்டாதது தான் இதற்குக் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Jacqueline Fernandez asks 5 Crore Salary

நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் ஜாக்குலினும் இப்படத்தில் நடிக்க மறுத்ததால் படக்குழு ரொம்பவே அப்செட்டில் இருக்கிறதாம். இருந்தாலும் தந்தைக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க ராம் சரண் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.

English summary
Sources said Actress Jacqueline Fernandez asked 5 Crore Salary for Chiranjeevi's Upcoming Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil