TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
Thala 59: தல 59 படத்தில் ஸ்ரீதேவி மகள்?: அஜித் ராசி ஒர்க்அவுட்டாகுமா?

சென்னை: தல 59 படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் தல 59 படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஸ்ரீதேவிக்கு தனது மகள் ஜான்வி கபூர் தன்னை போன்றே தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.

ஜான்வியின் முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இந்நிலையில் தல 59 படத்தில் ஜான்வி கபூர் கவுரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடித்த வாலி படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்த ஜோதிகா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் இருந்தார். அந்த ராசி ஜான்விக்கும் ஒர்க்அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதேவி பாலிவுட்டில் செட்டிலாகும் முன்பு கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தார். அவரை போன்றே அவரின் மகளும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.