Janhvi Kapoor: ஓ நோ.. ஜான்வி கபூர் நெஞ்சிலேயே பட்ட பவுன்சரின் கை.. வைரலாகும் வீடியோ!
மும்பை: பாலிவுட்டின் இளம் சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வரும் ஜான்வி கபூர் நடித்துள்ள பரம் சுந்தரி திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தொடர்ந்து ரொம்பவே பிசியாக மாறியிருக்கிறார் ஸ்ரீதேவியின் மகள். இந்நிலையில், பவுன்சர் ஒருவர் ஜான்வி கபூர் வருவதை தெரிந்துக் கொள்ளாமல் நின்றிருக்க அவர் மீது ஜான்வி மோதிய வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ஸ்ரீதேவியை விட பல மடங்கு கவர்ச்சி புயலாக மாறி இந்தி சினிமாவில் கலக்கி வருகிறார். பாலிவுட்டை தாண்டி கோலிவுட்டில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிறைவேறவில்லை.

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக டோலிவுட்டில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமான ஜான்வி கபூர் அடுத்ததாக ராம் சரணின் பெத்தி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஏகப்பட்ட சர்ச்சைகள்: நெப்போடிசம் சர்ச்சையில் தொடங்கி தற்போது மலையாளி அல்லாத ஜான்வி கபூர் மலையாளியாக ஏன் பரம் சுந்தரி படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அவர் மலையாளம் பேசும் அழகு எல்லாம் பல்லிளிக்கிறது என பவித்ரா மேனன் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜான்வி கபூர், நான் பாதி தமிழ், பாதி மலையாளம் சேர்ந்த கலவை என பதில் அளித்திருந்தார்.
நெஞ்சில் இடித்த பவுன்சர்: ஜான்வி கபூர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அடுத்த படமான ’சன்னி சன்சாரி கி துளசி குமாரி’ படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் இணைந்து ப்ரோமோட் செய்ய வந்த போது ஏகப்பட்ட கூட்டம் இருந்த நிலையில், பவுன்சர்கள் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது ஒரு பவுன்சர் ஜான்வி கபூர் வருவது தெரியாமல் நின்றிருக்க, அவரை இடித்துக் கொண்டு ஜான்வி கபூர் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Oh No: அந்த வீடியோவை இன்ஸ்டா பாலிவுட் எனும் பிரபல இன்ஸ்டாகிராம் பக்கம் "Oh No", "Oops" என பதிவிட்டு வெளியிட அதை பாலிவுட் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அந்த பவுன்சருக்கு வாழ்வுதான் என்றும் நேற்று இரவு அவர் தூங்கியிருக்கவே மாட்டார் என்றும் இந்த வீடியோவை அவரது மனைவி பார்த்தால் கண்டிப்பாக விவாகரத்து தான் என்றும் கூட்ட நெரிசலில் இதெல்லாம் சகஜம் தான் என்றும் அவர் வேண்டுமென்று பண்ணவில்லை, ஜான்வி தான் இடித்தார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











