»   »  ஜெயபிரதா-அமர்சிங் 'ஓசே ராமுலம்மா'!

ஜெயபிரதா-அமர்சிங் 'ஓசே ராமுலம்மா'!

Subscribe to Oneindia Tamil
Jayapradha
சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளரும், எம்.பியுமான அமர்சிங் நடிக்க வருகிறார். அவரது கட்சி எம்.பியும், முன்னாள் கனவுக் கன்னியுமான ஜெயபிரதா நடிக்கும் பெங்காலி மொழிப் படத்தில்தான் அமர்சிங் நடிகராகிறார்.

முன்னாள் அழகு தேவதை ஜெயப்ரதா நீண்ட காலத்திற்கு முன்பே அரசியலில் புகுந்தவர். உ.பி. மாநில அரசியலில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜெயப்ரதா, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி சார்பில் எம்.பியாகவும் உள்ளார்.

இடை இடையே திரைப்படங்களிலும் தலை காட்டிக் கொண்டுள்ளார் ஜெயப்பிரதா.

இந்த நிலையில் நீண்ட காலத்திற்கு முன்பு 'லேடி சூப்பர் ஸ்டார்' விஜயசாந்தி நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'ஓசே ராமுலம்மா' என்ற படத்தை பெங்காலியில் ரீமேக் செய்கிறார்கள். இதில் விஜயசாந்தி கேரக்டரில் ஜெயப்பிரதா நடிக்கவுள்ளார்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது.

இந்தப் படத்தில் ஒரு விசேஷமாக, சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கும் நடிக்கிறார். டிஜிபி கேரக்டரில் அவர் நடிக்கிறாராம். விஜயசாந்தி படத்தில் இந்த கேரக்டரில் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா நடித்திருந்தார்.

ஜெயப்பிரதா கேட்டுக் கொண்டதால் இந்த கேரக்டரில் நடிக்க சம்மதித்தாராம் அமர்சிங். தொடர்ந்து நடிக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லையாம்.

ஜெயப்பிரதா கடைசியாக நடித்த படம் தெலுங்கில் வெளியான மகாரதி என்பது நினைவிருக்கலாம்.

Please Wait while comments are loading...