»   »  ஜீவாவின் புதிய ஜோடி ஹன்சிகா!

ஜீவாவின் புதிய ஜோடி ஹன்சிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் ஓடுகிறதோ இல்லையோ.. புதிய படங்களில் பெரிய நடிகைகளுடன் ஜோடி போடும் வாய்ப்பு மட்டும் ஜீவாவுக்கு தவறுவதே இல்லை.

ஸ்ரேயா, நயன்தாராவைத் தொடர்ந்து இப்போது ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கிறார் ஜீவா.

புதிய படம்

புதிய படம்

ஜீவா தற்போது ‘திருநாள்', ‘கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காதல், காமெடி

காதல், காமெடி

தற்போது, இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளராம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் காமெடி, காதல் கலந்த கதை.

மோடியின் தூதர்

மோடியின் தூதர்

இப்படத்தில் ஹன்சிகா, மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக வருகிறாராம். மேலும், இவருடைய கதாபாத்திரம் நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்கிறார்கள்.

அரண்மனை 2 முடிந்ததும்...

அரண்மனை 2 முடிந்ததும்...

ஹன்சிகா தற்போது ‘அரண்மனை-2' படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். ஜீவா தனது இரு படங்களிலும் பிஸியாக உள்ளார். இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு, ராம்பிரகாஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.

English summary
Jiiva is pairing up with top actress Hansika for the first time for a new movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil